ஜனாதிபதி தெரிவு வாக்களிப்பில் கூட்டமைப்பு நடு நிலை வகிப்பதாக தெரிவிக்க விக்னேஸ்வரனுக்கு உரிமையில்லை - சாணக்கியன்

Published By: Digital Desk 3

16 Jul, 2022 | 03:10 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடு  நிலை வகிக்கும் எனக் கூறுவதற்கு விக்கினேஸ்வரன் எம்.பி. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் அல்ல.

இதுதொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் 19ஆம் திகதி கலந்துரையாட இருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வு நிறைவடைந்த பின்னர் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் வைத்து சனிக்கிழமை (16)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் எவரையாவது  ஆதரிப்பதா அல்லது நடு நிலை வகிப்பதா  என்பது தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்னும் ஒரு தீர்மானத்திற்கு வரவில்லை.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி. க்கள் 19 ஆம்  திகதி சந்திக்கவுள்ளதால் அன்றைய தினமே இறுதி முடிவெடுக்கப்படும் எனறார்.

ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும்  நடு  நிலை வகிக்கும் என தமிழ் மக்கள் கூட்டணி செயலாளரும் .எம்.பியுமான விக்னேஸ்வரன் கூறியுள்ளாரே என கேட்டதற்கு

ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடு  நிலை வகிக்கும் எனக் கூறுவதற்கு விக்கினேஸ்வரன் எம்.பி. தமிழ் தேசியக்கூட்டமைப்பை சேர்ந்தவரல்ல.அவர்  எமது கட்சியிலிருந்து எப்போதோ வெளியேறிவிட்டார்.

எனவே எமது கட்சியின் நிலைப்பாட்டை அவர் எப்படிக் கூற முடியும்? அவ்வாறான எந்த தீர்மானத்தையும் நாங்கள் விக்னேஸ்வரன் எம்,பின் கட்சியுடன் மேற்கொள்ளவில்லை.

நாட்டை மீண்டும் ஸ்திர நிலைக்கு கொண்டு வரவேண்டுமானால் போராட்டக்காரர்களும் விரும்பக்கூடிய ஜனாதிபதி ,பிரதமரைக் கொண்ட தேசிய அரசாங்கம்  அமைக்கப்பட வேண்டும்.

அதனைவிடுத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வைத்துக்கொண்டு ஜனாதிபதி,பிரதமரை  தெரிவு செய்தால் நாடு ஒருபோதுமே ஸ்திர நிலையை அடைய முடியாது. ஏனெனில் கோத்தா ,ரணில் வீட்டுக்கு போக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.

அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் இவர்களுக்கு நாங்கள் தெரிவிக்கவேண்டியதில்லை. அவர்களுக்கு அது நன்றாகவே தெரிந்த விடயம். எனவே தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையை தீர்க்காமல் இலங்கைக்கு எதிர்காலம் இல்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை...

2024-09-07 18:28:56
news-image

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றிபெற்று தமிழர்களின்...

2024-09-07 22:59:45
news-image

அநுர கூறுவதைப் போன்று சிங்கள மக்களின் ...

2024-09-07 18:22:22
news-image

மாகாண சபை முறைமையை மீண்டும் பலப்படுத்தி...

2024-09-07 22:26:01
news-image

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடேன் - பா.அரியநேத்திரன்

2024-09-07 14:22:14
news-image

கடந்து வந்த பாதையை ஜனாதிபதி மறந்துவிட்டார்...

2024-09-07 18:17:06
news-image

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்...

2024-09-07 17:30:15
news-image

கருத்துச் சுதந்திரம் பாதிப்பற்ற வகையில் கண்காணிக்கப்பட...

2024-09-07 18:12:30
news-image

சிலாபம் - புத்தளம் வீதியில் விபத்து;...

2024-09-07 18:25:56
news-image

ராஜபக்சர்கள் சீரழித்த நாட்டை மீண்டும் ரணில்,...

2024-09-07 21:53:36
news-image

கல்முனையில் யானையால் தாக்கப்பட்டு யாசகர் பலி

2024-09-07 17:57:54
news-image

பொத்துவில் பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2024-09-07 17:35:27