ஜனாதிபதி தெரிவு வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நடுநிலை வகிக்க தீர்மானம் - சி.வி. விக்னேஸ்வரன்

By T. Saranya

16 Jul, 2022 | 03:08 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பதென்ற நிலைப்பாட்டில் தற்போதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்கள் கூட்டணியும் உள்ளன.

ஜனாதிபதி வேட்பாளர்கள் எம்முடன் கலந்துரையாடி எமது கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில்  தமது நிலைப்பாடு மாறலாம்  என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வு நிறைவடைந்த பின்னர் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் வைத்து சனிக்கிழமை (16)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் எந்த ஜனாதிபதி வேட்பாளரையும் ஆதரிக்காது நடுநிலை வகிப்பதென்ற நிலைப்பாட்டிலே இதுவரை தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கட்சியை சேர்ந்த நானும்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களும் உள்ளோம். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சி தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது.

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் எந்த வேட்பாளர்களும்   தமக்கு ஆதரவளிக்குமாறு   எம்மிடம் இதுவரையில்  கோரவில்லை. அப்படி அவர்கள் கோரும்பட்சத்தில்,எமக்கான உறுதி மொழிகளை வழங்கும் பட்சத்தில் சில வேளைகளில் எமது நிலைப்பாடு மாறலாம். அவ்வாறு இல்லாமல் வாக்களிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை.

ரணில் விக்கிரமசிங்க சிரேஷ்ட அரசியல் தலைவர். மிகவும் அனுபவம் உள்ளவர். அதில் மாற்றுக்கருத்துக்கிடையாது. அவருடன் இணைந்து செயற்படுவதில் எமக்கு பிரச்சினை கிடையாது. அவரது அமைச்சரவையில் இணைந்துகொள்வதற்கு எந்த எண்ணமும் இல்லை. என்றாலும் நான் அவருக்கு மூன்று நிபந்தனைகளை முன்வைத்திருந்தேன்.

அதாவது, அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும், வடக்கு கிழக்கிலுள்ள தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் காணிகள் உடனடியாக மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். 

வடக்கில் மேலதிகமாக உள்ள இராணுவத்தினர்  அகற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளை அவர் நிறைவேற்ற வேண்டும். இதன்போது அவருடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் பார்க்கலாம்.

அத்துடன் பாராளுமன்ற பிரதி சபாநாயகரின் தெரிவு இடம்பெற்ற போது ரணில் விக்ரமசிங்க சபையில்  என்னுடன் கலந்துரையாடினார். அப்போது பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்க, நான் முன்வைத்திருந்த நிபந்தனைகளை  படிப்படியாக நிறைவேற்றுவதாக தெரிவித்தார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்கள் தங்கள் அடையாளம் சுயமரியாதையை...

2022-12-02 16:44:44
news-image

கபூரியா மத்ரஸா விவகாரம் : 'வக்பு'...

2022-12-02 16:51:09
news-image

பல்கலைக்கழகத்திற்கு 44,000 மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை...

2022-12-02 16:18:11
news-image

ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மத்தியில்...

2022-12-02 15:20:16
news-image

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!

2022-12-02 14:57:28
news-image

ஒதியமலை படுகொலையின் 38 ஆவது நினைவேந்தல்...

2022-12-02 15:21:09
news-image

பொல்பித்திகமவில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை !

2022-12-02 14:45:00
news-image

பன்னலயில் பாடசாலை மாணவியிடம் கருத்தடை மாத்திரைகள்...

2022-12-02 14:33:00
news-image

15 வயதான மாணவி பாலியல் துஷ்பிரயோகம்...

2022-12-02 13:44:58
news-image

விபசார நடவடிக்கைக்காக ஓமானுக்கு இலங்கைப் பெண்கள்...

2022-12-02 13:39:28
news-image

பாராளுமன்றத்தில் தேவையற்ற பேச்சுக்களை பேசி நேரத்தை...

2022-12-02 14:51:46
news-image

10 மாதங்களில் 12,000 சமூக ஊடகங்கள்...

2022-12-02 13:28:32