இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கான அரசியலமைப்பு விதி

16 Jul, 2022 | 02:05 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் பதவி விலகலை தொடர்ந்து  1981ஆம் ஆண்டு 20ஆம் இலக்க ஜனாதிபதி தெரிவு (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் 04 ஆவது உறுப்புரைக்கு அமைய,பாராளுமன்றம் கலைக்கப்படாத சந்தர்ப்பத்தில் ஜனாதிபதிப் பதவியில் வெற்றிடம் ஏற்படும் போது, அவ்வாறான வெற்றிடம் ஏற்பட்டு மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு அழைப்பதற்குச் செயற்படுதல் வேண்டும் என்பதால், பாராளுமன்ற செயலாளர் நாயகம் நேற்று வெளியிட்ட விசேட வர்த்தமானிக்கமைய பாராளுமன்றம் அமர்வு இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

பாராளுமன்ற அமர்வு இன்று காலை 10 மணிக்கு சம்பிரதாய முறைக்கமைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. 

இதன்போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசியலமைப்பின் 38 (1) உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தமை குறித்து ஜனாதிபதி சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க சபையில் சமர்ப்பித்தார்.

அத்துடன் 1981 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க ஜனாதிபதி தெரிவு (சிறப்பு ஏற்பற்டுகள்) சட்டத்தின் 04 ஆவது உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்ற அமர்வு இடம்பெற்று 48 மணித்தியாலங்கள் முந்தாமலும், 7 நாட்கள் பிந்தாமலும் வேட்பு மனுக்கல் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதற்கமைய எதிர்வரும் செவ்வாய்கிழமை மு.ப.10 மணிக்கு பாராளுமன்றம் கூடி வேட்புமனுக்களை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபையில் தெரிவித்தார்.

அத்துடன் அரசியலமைப்பின் 6 ஆவது உறுப்புரையின் பிரகாரம் வேட்பு மனுக்களை சமர்ப்பித்தல் முறைமை தொடர்பில் செயலாளர் நாயகம் சபைக்கு தெளிவுப்படுத்தினார். வேட்பு மனுக்கலை தாக்கல் செய்யும் உறுப்பினர் எதிர்வரும் 19ஆம் திகதி கட்டாயம் சபைக்கு சமுகமளிக்க வேண்டும்.

தற்போது உத்தேசித்துள்ளதற்கமைய எதிர்வரும் 20 ஆம் திகதி புதன் கிழமை பாராளுமன்றம் கூடி ஜனாதிபதி பதவி வெற்றிடத்திற்கு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்துக்கொள்ள வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற செயலாளர் நாயகம், ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்கு அரசியலமைப்பின் 92 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியின்மைகளை சகல உறுப்பினர்களும் கவனத்திற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நாட்டு மக்களின் கோரிக்கைக்கமையவும், அரசியல் கட்சி தலைவர்களின் தீர்மானத்திற்கமையவும் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்தேன், அரசியலமைப்பிற்கமைய அடுத்தக்கட்ட நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தை செயலாளர் நாயகம் சபையில் வாசிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒருசில உறுப்பினர்கள் மேசையினை தட்டி ஆரவாரம் தெரிவித்தனர், அதற்கு அருகில் இருந்த உறுப்பினர்கள் ' வேண்டாம்'என்ற தொனியில் மறுப்பு தெரிவித்தனர்.

தாய் நாட்டிற்கு முடிந்த சேவையினை செய்துள்ளேன், இனி வரும் காலங்களிலும் இயலுமான சேவையினை ஆற்றுவேன் என ஜனாதிபதி குறிப்பிட்டதை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குறிப்பிட்டதை ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து பாராளுமன்ற ஒத்திவைப்பு சபை முதல்வர் தினேஷ் குணவர்தனவினால் பிரேரிக்கப்பட்டது. அதற்கமைய அடுத்த பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19) காலை 10.00 மணிக்கு கூடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.

சபை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் ஒருசில உறுப்பினர்கள் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடல் சுமுகமான முறையில் உரையாடினார்கள்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,சமல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துக்கொள்ளவில்லை. ஜனாதிபதி தெரிவுக்காக போட்டியில் கலந்துக்கொள்ள போவதாக அறிவித்த முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெருமவும் சபை அமர்வில் கலந்துக்கொள்ளவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆளுகை, உலகளாவிய ஆரோக்கியத்தில் மூட நம்பிக்கை,...

2025-01-15 18:48:30
news-image

ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களிற்கு ஆதரவளித்து ஒற்றுமையை வெளிப்படுத்திய...

2025-01-15 16:35:02
news-image

அடர்ந்த காட்டுக்குள் இப்படி ஒரு அவலமா? ...

2025-01-15 21:24:26
news-image

மயிலத்தமடு மாதவணை பண்ணையாளர்கள் போராட்டமும் பட்டிப்...

2025-01-15 15:58:47
news-image

'கேணல்' கிட்டுவின் செயலினால் விஜய குமாரதுங்க...

2025-01-15 12:43:42
news-image

புதிய அரசாங்கத்தின் நெறிமுறைகளுடன் அரச பொறிமுறைகள்...

2025-01-15 10:08:35
news-image

தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கிய அகதிகள் -...

2025-01-12 17:38:39
news-image

உட்கட்சிப் பிரச்சினைக்கும் ஒருங்கிணைந்த அரசியலுக்கும் சிவில்...

2025-01-12 16:35:46
news-image

தாய்வானை சீன மாகாணம் என்பதால் அமெரிக்கா...

2025-01-12 16:26:02
news-image

ஐ.தே.க.வுடன் இணைவதற்கு மனம் இன்றி சம்மதித்த...

2025-01-12 16:19:41
news-image

திணறடிக்கும் பொருளாதாரம்

2025-01-12 15:41:46
news-image

அதிகாரத்தின் வீழ்ச்சி - 2024 இல்...

2025-01-12 15:20:56