தமிழ்க் கட்சிகளின் இயங்காநிலை “கண்ணீர்விட்டா வளர்த்தோம்”

Published By: Digital Desk 5

16 Jul, 2022 | 02:38 PM
image

சி.அ.யோதிலிங்கம்

காலிமுகத்திடல் போராட்டத்தின்; முதலாம் கட்டம் வெற்றியுடன் நிறைவடைந்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூர் சென்று தனது பாதுகாப்பு நிலையை உறுதிப்படுத்திய பின் இராஜினமாக்கடிதத்தை அனுப்பியுள்ளார். போராட்டத்தின் முதலாம் கட்டம் முடிவடைந்துள்ளதால் தந்திரோபாய ரீதியாக போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், என்பவற்றிலிருந்து வெளியேறியுள்ளனர். 

இரண்டாவது கட்டப் போராட்டம் ரணிலின் ஆட்சிக்கு எதிரானது. இங்கு ரணில் ஆட்சியை மட்டுமல்ல அவருக்கு பின்னாலுள்ள அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்துடனும் போராட வேண்டும். இதற்கு வேறுபட்ட மூலோபாயங்களும் தந்திரோபாயங்களும் தேவை. அணி சேர்க்கைகளும் வேறுபடும் 90நாட்களுக்கு மேல் போராடிய போராட்டக்காரர்களுக்கு சற்று ஓய்வும் தேவையாக உள்ளது. இந்த வகையில் பின்வாங்கல் புத்திசாலித்தனமான முடிவேயாகும்.

வருகின்ற 19ஆம் திகதி ஜனாதிபதிக்கான வேட்பு மனுத்தாக்கல் இடம்பெறும் போது ரணில் வேட்பு மனுத்தாக்கல் செய்வார். 20ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறும் போது ரணில் வெற்றியடைவதற்கே வாய்ப்புக்கள் உள்ளன. ரணில் 123பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாக கூறியிருக்கின்றார். மொட்டு கட்சியினருக்கும் ரணிலை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. 

ரணிலுக்கு  உள்நாட்டில் செல்வாக்கு இல்லாத போதும் சர்வதேச அளவில் வேறு எவருக்கும் இல்லாத செல்வாக்கு அவருக்குள்ளது. அவர் மேற்குலகின் செல்லப்பிள்ளையாக இருப்பதால் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் அவரை ஆதரிப்பதற்கு தயாராக இருக்கின்றன. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்றனவும் ஆதரிக்க தயாராக இருக்கின்றன. ரணிலை நியமிப்பதன் மூலம் ராஜபக்~க்களுக்கும் பிடி இருக்கின்றது. ரணிலுக்கும் பிடி இருக்கின்றது. ரணிலின் அரசியல் இருப்பு ராஜபக்~க்களில் தங்கியிருக்கின்றது. அதேவேளை ராஜபக்~க்கள் உட்பட மொட்டு கட்சியினரின் பாதுகாப்பு ரணிலில் தங்கியிருக்கின்றது. 

ரணிலின் பதவிஏற்போடு காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த சிங்கள உயர்வாக்கம் போராட்ட ஆதரவிலிருந்து கழரத் தொடங்கியுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம் என்பவற்றிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறி அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறியிருக்கின்றது. போராட்டக்காரர்களைப் பொறுத்தவரை ‘கறையான் புற்றெடுக்க கருநாகம்’ புகுந்த நிலைதான். 

காலி முகத்திடல் போராட்டக்காறர்கள் சிலர் யாழ்ப்பாணம் வந்து தமிழ்ச் செயற்பாட்டாளர்களிடம் பேசியபோது தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் அவர்களிடம் கேட்ட கேள்வி “கோட்டாவை வீட்டுக்கு அனுப்பிய பின் அடுத்தது என்ன?” என்பது தான். அதற்கு போராட்டக்காரர்களிடம் உறுதியான பதில் இருக்கவில்லை. கோட்டாவை வீட்டுக்கு அனுப்பி ரணிலுக்கு முடிசூடுவதற்காக நாம் போராடவில்லை. இந்த அரச முறைமை முழுமையாக மாற்றுவதற்குத்தான் போராடுகின்றோம் எனக் கூறியிருந்தனர். 

இந்த நெருக்கடி என்பது பெரும் தேசியவாதத்தின் லிபரல் பிரிவு, பெருந்தேசியவாதத்தின் இனவாதப்பிரிவு, ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் குறிப்பாக தமிழ் மக்கள், புவிசார் அரசியல்காரரான இந்தியா, பூகோள  அரசியல்காரர்களான அமெரிக்கா, சீனா, என்பவற்றின் நலன்களுக்கிடையிலான மோதல் தான். எனவே நெருக்கடிக்கான தீர்வு என்பது இந்த நலன்கள் சந்திக்கின்ற புள்ளி தான். அந்தச் சந்திக்கும் புள்ளி ஏதேஒரு வகையில் இதில் சம்மந்தப்பட்ட ஆறு தரப்பினரையும் திருப்தி செய்வதாக இருக்க வேண்டும். 

ஆனால் தற்போதைய ரணிலின் பதவியேற்பு சம்பந்தப்பட்ட ஆறு தரப்பினரையும் திருப்திசெய்தது எனக்கூற முடியாது. பூகோள அரசியல் காரர்களில் ஒருவரான அமெரிக்காவிற்கு மட்டும் முழுமையான வெற்றி கிடைத்துள்ளது. பெருந்தேசியவாதத்தின் லிபரல் பிரிவு ரணில் தரப்பு, சஜித் தரப்பு எனப் பிரிந்து கிடக்கின்றது. இதில் சஜித் தரப்புக்கு தோல்விதான். எனவே லிபரல் தரப்பிற்கு அரை வெற்றியே கிடைத்தது எனக்கூறலாம்.

பூகோள அரசியல் காரர்களில் ஒருவரான சீனாவிற்கு இது தோல்வியே. தோல்வியடைந்த தரப்பு சும்மா இருக்கப்போவதில்லை. எனவே போராட்டக்காரர்களுக்கும் அவர்களுக்கு பின்னால் நிற்கின்ற தொழில் சங்கங்களுக்கும் சீனாவே நிதி உதவிகளை வழங்குவதாகக் கூறப்படுகின்றது. ஏற்கனவே துறைமுக கிழக்கு முனைய போராட்டங்களின் போதும் சீனாவே எதிர்ப்பு தொழிற்சங்கங்களுக்கு நிதி உதவிகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்வதைத் தவிர சீனாவிற்கு வேறு தெரிவில்லை.

புவிசார் அரசியல்காரரான இந்தியாவிற்கு தனது பிராந்தியத்தில் அமெரிக்கா மேலாதிக்கம் செலுத்துவது கொஞ்சம் கடுப்புத்தான். ரணில் மேற்குலக முகம் கொண்டவர் என்பதும் அதற்கு அதிருப்தி தான். இரண்டு காரணங்களுக்காக தனது அதிருப்தியை சற்று அடக்கி வாசிக்கின்றது. ஒன்று தனது கொல்லைப்புறத்தில் அமைதியின்மை உருவாகுவதை அது விரும்பவில்லை. இரண்டாவது சீனாவின் ஆதிக்கத்திற்கு முகம் கொடுக்க இந்தோ - பசுபிக் மூலோபாயக் கூட்டில் அதுவும் இணைந்திருக்கின்றது. அந்தக் கூட்டு பலவீனப்படுவதையும் அது விரும்பவில்லை.

பெருந்தேசியவாதத்தின் இனவாதப்பிரிவு மொட்டுக் கட்சி, சுயாதீனப் பாராளுமன்றக் குழு, ஜே.வி.பி என்பவற்றை உள்ளடக்கியது. இதில் மொட்டுக்கட்சி தற்காப்பு நிலையை எடுத்துள்ளது. ஏனையவற்றிற்கு தோல்விதான். இந்த இனவாதப்பிரிவில் உள்ள மகாநாயக்கர்களுக்கும் ஒரு வகையில் தோல்விதான்.

இந்த நெருக்கடி மைதானத்தில் சம்பந்தப்பட்டவர்களில் ஒரு தரப்பைத் தவிர சகல தரப்பினரும் தங்கள் தங்கள் நலன்களிலிருந்து விளையாடியிருந்தனர். சில தரப்பிற்கு முழு வெற்றியும், சில தரப்பிற்கு அரை வெற்றியும், வேறுசில தரப்பிற்கு அரைத் தோல்வியும், சில தரப்பிற்கு முழுத் தோல்வியும் கிடைத்திருந்தன. ஆனால் ஒரு தரப்பு மட்டும் நெருக்கடி மைதானத்தில் விளையாடுவதற்கு கௌரவமான இடமிருந்த போதும் மைதானத்தில் விளையாடவேயில்லை. அது தமிழ்த்தரப்புத் தான். 

தமிழ்த்தரப்பில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பொறுப்பை ஒப்படைக்க கூட்டமைப்பு தனிநபரான சுமந்திரனிடம் பொறுப்பை ஒப்படைத்தது. சுமந்திரன் தனித் தரப்பாக விளையாடுவதற்கு பதிலாக தமிழ் மக்களின் நலன்களைக் கைவிட்டுவிட்டு பெருந்தேசியவாத லிபரல் தரப்பின் ஒருசாராருக்காக விளையாடினார். தற்போதும் விளையாடிக்கொண்டிரு;கிறார். இந்த நெருக்கடி மைதானத்தில் தாயகத்திற்கு வெளியே இருக்கும் மனோகணேசன் கொடுத்த குரலைக்கூட சுமந்திரனோ, சாணக்கியனோ கொடுக்கவில்லை. 

போராட்டக்காரர்கள் அரசியல் கட்சிகள் சந்திப்பின்போது மனோகணேசன் “இந்நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு மூலகாரணம் தீர்;க்கப்படாத இனப்பிரச்சினை தான். அதற்குப் பதில் தேடாமல் இந்நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு தேட முடியாது” எனத் தெளிவாகக் கூறியிருந்தார். சுமந்திரனோ ஜனாதிபதி நியமனம் பற்றிய அரசியல் யாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போராட்டக்காறர்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார். தமிழ் மக்கள் விவகாரம் பற்றி வாயயே திறக்கவில்லை.

கோட்டாபய, மஹிந்த, ப~pல் ஆகியோரை பதவிநீக்குவதற்கு அரசியல் யாப்பிற்கு வெளியிலான அணுகுமுறை தேவை. ஜனாதிபதி நியமனத்திற்கு மட்டும் அரசியல் யாப்பு வழிமுறை தேவைதானா? என்ற கேள்வியை முறையாக கேட்பதற்கு யாரும் இருக்கவில்லை. போராட்டக்காரர்களுக்கு தற்போதுள்ள ஒரேயொரு ஆறுதல் சஜித்தரப்பு, சுயாதீனப் பாராளுமன்றக்குழு, தமிழ்த்தரப்பு, சீனா என்பவை ரணில் அரசிற்கு வெளியில் நிற்பதுதான். இந்த அணி இருக்கும்வரை நெருக்கடிக்களம் சூடாக இருப்பதற்கே வாய்ப்புக்கள் உண்டு. 

தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளில் முழுமையாகவே நம்பிக்கை இழந்துள்ளனர். கூட்டமைப்பிலும் நம்பிக்கை இல்லை மாற்றாக வந்தவர்களிலும் நம்பிக்கை இல்லை. எந்தத் தரப்பும் தமிழ் மக்களின் நலன்களிலிருந்து நெருக்கடி மைதானத்தில் தலையீடு செய்யவில்லை. இதனால் இந்த விவகாரத்தை சிவில் அமைப்புக்கள் தங்கள் கைகளில் எடுப்பதற்கு முயற்சிசெய்து வருகின்றன. 

தமிழ் மதத் தலைவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றி ஒருங்கிணைந்து குரல் கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். சிவில் தரப்பில் இன்னோர் பிரிவினர் தமிழ்ப் பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடி வருகின்றனர்.  தமிழ் மக்களின் அபிலாi~கள் தமிழ்த்தேசியக் கட்சிகள் முன்னெடுக்காவிட்டால் இக்கட்சிகளை தமிழ் மக்களிடம் அம்பலப்படுத்தி அரங்கிலிருந்து அவற்றை அகற்றுவதைத் தவிர வேறு தெரிவில்லை.

 “நதிகள் ஒருபோதும் பின்னோக்கி பாய்வதில்லை”

 தமிழ்க் கட்சிகள் இதனைப் புரிந்துகொள்ளுமா? 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41