நடிகை ஆனந்தி நடிக்கும் 'நதி' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 5

16 Jul, 2022 | 11:19 AM
image

நடிகர் சாம் ஜோன்ஸ் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்திருக்கும் 'நதி' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் தாமரை செல்வன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'நதி'. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் தயாரிப்பாளரும், நடிகருமான சாம் ஜோன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

இவருக்கு ஜோடியாக நடிகை ஆனந்தி நடிக்க, இவர்களுடன் கரு பழனியப்பன், முனீஸ் காந்த், வடிவேல் முருகன், நடிகை மது ஸ்ரீ, எழுத்தாளர் வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எம். எஸ். பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு திபு நினன் தோமஸ் இசையமைத்திருக்கிறார்.

காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, உருவாகி இருக்கும் இந்த ' நதி' திரைப்படத்தை மாஸ் சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சாம் ஜோன்ஸ் தயாரித்திருக்கிறார்.

கொரோனா காரணமாக இப்படத்தின் பணிகளில் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்து, ஜூலை 22 ஆம் திகதியன்று வெளியாகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்னோட்டத்தில் கல்லூரி காதலும், ஆணவ கொலை மற்றும் சாதிய முரண்பாடு போன்றவை இடம்பெற்று இருப்பதால் இளைய தலைமுறையினரை 'நதி' கவரும் என உறுதியாக சொல்லலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35