(ஆர்.ராம்)
அரசியலமைப்புச் சட்டம் காணப்பட்டாலும் அதற்கு அப்பால் மக்கள் சக்தியிடமே தற்போது அதிகாரம் காணப்படுகின்றது. இதனை அரசியல் கட்சிகள் மறந்து விடக்கூடாது என்று பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்கட்சிகளுக்கு முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் குமார் குணரட்னம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதிய இடைக்கால ஜனாதிபதியை அமைத்தல் மற்றும் பிரதமரைத் தெரிவு செய்தல் ஆகிய விடயத்தில் பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் ஒருசில அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் வீரகேசரிக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தினால் ஜனநாயகத்திற்கு முரணாக முன்னெடுக்கப்பட்ட ராஜபக்ஷ ஆட்சி வீழ்த்தப்பட்டுள்ளது.
இதுவெறுமனே ராஜபக்ஷக்களை வெளியேற்றுவதற்கான போராட்டம் அல்ல. தற்போது ராஜபக்ஷக்களின் பிரதிநிதியான ரணில் விக்கிரமசிங்க ஆட்சிப் பீடத்தில் அமர்ந்துள்ளார். அவர் ஆட்சி அதிகாரத்தினை தன்னகப்படுத்துவதற்கு முனைந்துகொண்டு இருக்கின்றார்.
இவ்வாறானதொரு நிலைமையில் தான் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் அடுத்தகட்ட செயற்றிட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளனர். அதனை பிரகடனமாகவும் அறிவித்துள்ளனர்.
ஆகவே அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அந்த விடயங்களை உள்ளீர்ப்பதையே கவனத்தில் கொள்ள வேண்டும். வெறுமனே பதவிகளுக்காக தமக்குள் முரண்பட்டுக்கொண்டிருப்பது பொருத்தமற்றதாகும்.
தற்போது அரசியல் கலாசாரத்தினை, முறைமையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அந்தச் சந்தர்ப்பத்தினை புறந்தள்ளி செயற்படுவது முறையானது அல்ல.
அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுவதாக குறிப்பிடப்பட்டாலும் அரசியலமைப்புச் சட்டங்களுக்கு அப்பால் மக்கள் சக்தி கட்டியெழுப்பபட்டுள்ளது. அந்த சக்தியிடம் அதிகாரம் உள்ளது.
ஆகவே அந்த சக்தியின் கோரிக்கைகள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டியது அதிகாரத்தில் உள்ளவர்களின் கடமையாகின்றது.
அதனைவிடுத்து மீண்டும் பழைய பாதையிலேயே செல்வதற்கு விளைந்தால் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள்.
தற்போதைய நிலையில் கட்டியெழுப்பபட்டுள்ள மக்கள் சக்தியை அடிப்படையாக கொண்ட தேசிய மக்கள் சபைகள் உருவாக்கப்பட வேண்டும்.
அவை நாட்டின் அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். அதன் மூலமாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM