தனது குட்டியை காப்பாற்ற சென்று மயங்கி விழந்த தாய் யானை

Published By: Digital Desk 3

15 Jul, 2022 | 05:29 PM
image

தாய்லாந்தில் வனப்பகுதிக்கு அருகே குழி ஒன்றில் விழுந்த தனது குட்டியை காப்பாற்ற முயன்ற தாய் யானை இதயம் செயலிழந்து மயங்கி விழுந்தது. 

ஒரு வயது மதிக்கத்தக்க அந்த குட்டியானை தாய் யானையுடன் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக குழி ஒன்றில் தவறி விழுந்தது. குட்டியை காப்பாற்ற முயன்ற தாய் யானை குழிக்குள் இறங்க முயன்ற போது மயங்கி விழுந்தது.

குட்டி யானையின் பிழிறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த வனத்துறையினர் தாய் யானையையும், குட்டி யானையையும் பாரம் தூக்கி இயந்திரம் மூலம் மீட்டனர்.

மயங்கி கிடந்த யானை மீது ஏறிக் குதித்து இதயத் துடிப்பு முதலுதவி அளித்து நினைவு திரும்ப செய்தனர். 

பின்னர் அந்த யானை தனது குட்டியுடன் வனப்பகுதிக்குள் சென்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்