நடிகை ஆண்ட்ரியா கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பிசாசு 2' படத்தின் வெளியிட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
'தமிழ் திரை உலகத்தின் கருப்பு கண்ணாடி இயக்குநர்' என போற்றப்படும் மிஷ்கின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பிசாசு 2'. இந்தப் படத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் நடிகைகள் பூர்ணா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, நடிகர்கள் அஜ்மல், சந்தோஷ் பிரதாப் ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்கள்.
கார்த்திக் ராஜா இசை அமைத்திருக்கும் இந்த ஹாரர் திரில்லர் ஜேனர் திரைப்படத்தை ராக்ஃபோர்ட் என்டர்டெய்ன்மென்ட் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி முருகானந்தம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
'பிசாசு' படத்தின் முதல் பாகம் 2014 ஆம் ஆண்டில் வெளியாகி, பெரும் வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து பிசாசு படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் இந்த இரண்டாம் பாகம் தயாராகி இருக்கிறது.
'பிசாசு 2' தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'பிசாசு 2' திரைப்படம் எது வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மிஷ்கின் ஹாரர் திரில்லர் இயக்குவதில் தேர்ச்சி பெற்றவர் என்பதாலும் 'பிசாசு 2' படத்தில் மக்கள் செல்வன் விஜய சேதுபதி நடித்திருப்பதாலும், படம் பாரிய அளவில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM