இலங்கை - இந்திய பாதுகாப்பு தொடர்பான 4 ஆவது உயர்மட்டக் கலந்துரையாடல் பாதுகாப்பு அமைச்சின் கோட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

இக் கலந்துரையாடல் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்திய பாதுகாப்பு தூதுக்குழுவுக்கு இந்திய பாதுகாப்பு செயலர் ஜீ. மோகன் குமார்  தலைமை வகித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு, பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் போன்றன இம் உயர்மட்ட கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டன.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா, இலங்கை பாதுகாப்பு படையின் பிரதானி, இராணுவத்  தளபதிகள், கடற்படைத் தளபதிகள் மற்றும் இரு நாட்டு மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட இருநாட்டு இராணுவ பிரதிநிகள்  இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.