சிறந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான பொதுமக்களின் பேராவலை ஜூலை 9 போராட்டங்கள் நன்கு புலப்படுத்துகின்றது - கனேடிய வெளிவிவகார அமைச்சர்

Published By: Digital Desk 5

15 Jul, 2022 | 11:15 AM
image

(நா.தனுஜா)

இலங்கையில் கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற போராட்டங்கள் ஓர் சிறந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான பெருவிருப்பத்தைத் தெளிவாகப் புலப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலானி ஜொலி, பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்களை உடனடியாக மேற்கொள்வதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படக்கூடிய அரசியலமைப்பிற்கு அமைவானதுமான நடவடிக்கைகளுக்கு கனடா ஆதரவு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாடளாவிய ரீதியில் கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டங்கள் படிப்படியாகத் தீவிரமடைந்துவந்த நிலையில், கடந்த வாரம் கொழும்பிலுள்ள ஜனாதிபதித மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது.

அதனைத்தொடர்ந்து 13 ஆம் திகதியன்று தான் பதவி விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் நாட்டைவிட்டு வெளியேறினார்.

பிரதமராகப் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி ஏற்கனவே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவந்ததுடன் சில தினங்களுக்கு முன்னர் அவரது இல்லம் தீக்கிரையாக்கப்பட்ட பின்னணியில், நேற்று முன்தினம் பதில் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட அவருக்கு எதிரான போராட்டங்கள் மேலும் வலுப்பெற்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் செய்திருக்கும் பதிவிலேயே கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலானி ஜொலி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கையில் கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற போராட்டங்கள் ஓர் சிறந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான பெருவிருப்பத்தைத் தெளிவாகப் புலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அதன்படி பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்களை உடனடியாக மேற்கொள்வதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படக்கூடிய அமைதியானதும் அரசியலமைப்பிற்கு அமைவானதுமான நடவடிக்கைகளுக்கு கனடா ஆதரவு வழங்கும்.

அதேவேளை அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்களின்மீதும், ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவையாகும்.

அதுமாத்திரமன்றி அத்தகைய வன்முறைத்தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்கள் பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டியது அவசியமாகும். மேலும் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான உரிமை உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04