ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து உத்தியோகபூர்வமான விலகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனர உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபாயவின் இராஜினாமாவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு சபாநாயகர் சபாநாயகர் இல்லத்தில் இடம்பெற்றது.
இந்நிலையில்,ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் பதவி விலகலை சபாநாயகர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.
அரசியலமைப்பின் 38 (1) உறுப்புரைக்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுப்பி வைத்துள்ள பதவி விலகல் கடிதம் கிடைக்கப் பெற்றுள்ளது.
நாளை சனிக்கிழமை விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறுமென சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.
அரசியல் நெருக்கடிக்கு பாராளுமன்ற ஜனநாயக கோட்பாடுகளுக்கமைய தீர்வுகாண நாட்டு மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சபாநாயகர் இதன்போது மக்களை கேட்டுக்கொண்டார்.
அரசியலமைப்பிற்கமைய இடைக்கால ஜனாதிபதி நியமனம் இன்னும் 7 நாட்களுக்குள் இடம்பெறும் எனவும் சபாநாயகர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வரை ஜனாதிபதியின் அதிகாரங்கள், பொறுப்புக்கள் மற்றும் அரசியலமைப்பினால் பொறுப்பாக்கப்பட்டுள்ள விடயங்களை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுத்துவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM