ராஜபக்ஷர்களின் கட்டளைகளுக்கமையவே பதில் ஜனாதிபதி ரணில் செயற்படுவார் - சரத் பொன்சேகா

Published By: Digital Desk 5

15 Jul, 2022 | 10:34 AM
image

(இராஜதுரை ஹஷான்)

ராஜபக்ஷர்களின் கட்டளைகளுக்கமையவே பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படுவார்.மக்களின் போராட்டத்தை தொடர்ந்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகள் அனைத்தையும் இவரே இல்லாதொழித்தார்.

புதிய அரசியல் சக்தியை உருவாக்குவதற்கு சகல தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

போராட்டகாரர்களின் தியாகத்தை நாட்டு மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.எதிர்கால தலைமுறையினருக்காக இளைஞர்கள் தங்களின் நிகழ்காலத்தை நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார்கள். காலி முகத்திடலில் 90 இற்கும் அதிகமான நாட்கள் போராட்டத்தில் ஈடுப்படுவது சாதாரணதொரு விடயமல்ல எனவும் தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார நெருக்கடியே அரசியல் நெருக்கடியாக தீவிரமடைந்துள்ளது.ஜனாதிபதி கோட்டபய ராஜபக்வின் பலவீனமான நிர்வாகத்தையும்,பொதுஜன பெரமுனவின் தான்தோன்றித்தனமான அரசாங்கத்தையும் நாட்டு மக்கள் முழுமையாக புறக்கணித்துள்ளனர்.

நாட்டு மக்கள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு மாத்திரமல்ல எதிர்காலத்தில் தோற்றம் பெறவுள்ள அரச தலைவர்களுக்கும்,அரசியல்வாதிகளுக்கும் சிறந்த படிப்பினையை எடுத்துரைத்துள்ளார்கள்.போராட்டம் நிறைவடைந்து விட்டது இனி வழமை போல் செயற்படலாம் என அரசியல்வாதிகள் ஒருபோதும் கருத கூடாது.

போராட்டகாரர்களின் தியாகத்தை நாட்டு மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.போராட்டகார்கள் அரசியல் வரபிரசாதங்களை பெற்றுக்கொள்வதற்காக போராட்டத்தில் ஈடுப்படவில்லை.

எதிர்கால தலைமுறையினருக்காக இளைஞர்கள் தங்களின் நிகழ்காலத்தை நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார்கள்.காலி முகத்திடலில் 90 நாட்களுக்கும் அதிகமாக முகாமிட்டு 'கோ ஹோம் கோட்டா' என போராடுவது சாதாரணதொரு விடயமல்ல.

முக்களின் மக்களின் போராட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இது சிறந்த அரச தலைவருக்கு அழகல்ல.நெருக்கடியான சூழ்நிலையை ரணில் விக்கிரமசிங்க சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்.சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட போது திறைமறைவில் இருந்து சகல முயற்சிகளையும் தோற்கடித்து விட்டு ராஜபக்ஷர்களின் அனுசரனையுடன் பிரதமர் பதவியை பெற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியதை தொடர்ந்து சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பதில் ஜனாதிபதி பதவியை பெற்றுக்கொண்டு,தற்போது இடைக்கால ஜனாதிபதிவியை அடைய முயற்சிக்கிறார்.ராஜபக்ஷர்களின் கட்டளைக்கமையவே பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படுவார்.பாராளுமன்றில் பொதுஜன பெரமுனவிற்கு அதிக பலம் உள்ள காரணத்தினால் அவர்களும ராஜபக்ஷர்களுக்கு சார்பாகவே செயற்படுவார்கள்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறந்த தரப்பினரை ஒன்றினைத்து அரசியல் ரீதியில் புதிய சக்தியை உருவாக்குவது சிறந்ததாக அமையும்.சிறந்த அரசியல் கலாச்சாரம் குறித்து நாட்டு மக்கள் அவதானம் செலுத்த வேண்டும்.தற்போதைய நெருக்கடியான சூழநிலையை கருத்திற்கொண்டு சகல அரசியல் கட்சிகளும் நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து சிறந்த தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-08 06:16:04
news-image

ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை: சிறைச்சாலை...

2026-08-08 06:14:24
news-image

துஷ்பிரயோக நோக்கங்களைக் கொண்ட நபர்கள், கைதிகளை...

2026-08-08 06:11:13
news-image

ரவி செனவிரத்னவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்குத்...

2026-08-08 05:45:32
news-image

மன்னார் பேசாலையில் பற்றைக்காட்டில் ஆண் ஒருவரின்...

2026-08-08 05:42:37
news-image

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளுக்கு...

2026-08-07 12:20:20
news-image

சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர பிரதிப்...

2026-08-07 23:54:30
news-image

சிறைச்சாலை வன்முறைகள் அரசாங்கத்தின் திட்டமிட்ட சதியா?...

2026-08-07 16:08:47
news-image

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் எனக்கு எதிராக...

2026-08-07 14:52:22
news-image

சத்துருக்கொண்டான் படுகொலை முறைப்பாட்டாளரை சிஐடி அழைப்பது...

2026-08-07 15:14:41
news-image

சிறைச்சாலை கட்டமைப்பை பலவீனப்படுத்த சதி: அமைச்சர்...

2026-08-07 16:07:58
news-image

விலை அதிகரிப்புக்கு மத்தியில் அரசின் சமூக...

2026-08-07 15:06:00