(இராஜதுரை ஹஷான்)
ராஜபக்ஷர்களின் கட்டளைகளுக்கமையவே பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படுவார்.பெரும்பாலான தரப்பினரது ஆதரவு கிடைக்கப்பெறுமாயின் இடைக்கால ஜனாதிபதி பதவியை ஏற்க தயார்.
புதிய அரசியல் சக்தியை உருவாக்குவதற்கு சகல தரப்பினரும் ஒன்றினைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.
போராட்டகாரர்களின் தியாகத்தை நாட்டு மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.எதிர்கால தலைமுறையினருக்காக இளைஞர்கள் தங்களின் நிகழ்காலத்தை நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார்கள்.காலி முகத்திடலில் 90 இற்கும் அதிகமான நாட்கள் போராட்டத்தில் ஈடுப்படுவது சாதாரணதொரு விடயமல்ல எனவும் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொருளாதார நெருக்கடியே அரசியல் நெருக்கடியாக தீவிரமடைந்துள்ளது.ஜனாதிபதி கோட்டபய ராஜபக்வின் பலவீனமான நிர்வாகத்தையும்,பொதுஜன பெரமுனவின் தான்தோன்றித்தனமான அரசாங்கத்தையும் நாட்டு மக்கள் முழுமையாக புறக்கணித்துள்ளனர்.
நாட்டு மக்கள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு மாத்திரமல்ல எதிர்காலத்தில் தோற்றம் பெறவுள்ள அரச தலைவர்களுக்கும்,அரசியல்வாதிகளுக்கும் சிறந்த படிப்பினையை எடுத்துரைத்துள்ளார்கள்.போராட்டம் நிறைவடைந்து விட்டது இனி வழமை போல் செயற்படலாம் என அரசியல்வாதிகள் ஒருபோதும் கருத கூடாது.
போராட்டகாரர்களின் தியாகத்தை நாட்டு மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.போராட்டகார்கள் அரசியல் வரபிரசாதங்களை பெற்றுக்கொள்வதற்காக போராட்டத்தில் ஈடுப்படவில்லை.
எதிர்கால தலைமுறையினருக்காக இளைஞர்கள் தங்களின் நிகழ்காலத்தை நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார்கள்.காலி முகத்திடலில் 90 நாட்களுக்கும் அதிகமாக முகாமிட்டு 'கோ ஹோம் கோட்டா' என போராடுவது சாதாரணதொரு விடயமல்ல.
; மக்களின் போராட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ளார்.இது சிறந்த அரச தலைவருக்கு அழகல்ல.நெருக்கடியான சூழ்நிலையை ரணில் விக்கிரமசிங்க சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்.சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட போது திறைமறைவில் இருந்து சகல முயற்சிகளையும் தோற்கடித்து விட்டு ராஜபக்ஷர்களின் அனுசரனையுடன் பிரதமர் பதவியை பெற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியதை தொடர்ந்து சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பதில் ஜனாதிபதி பதவியை பெற்றுக்கொண்டு,தற்போது இடைக்கால ஜனாதிபதிவியை அடைய முயற்சிக்கிறார்.
ராஜபக்ஷர்களின் கட்டளைக்கமையவே பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படுவார்.பாராளுமன்றில் பொதுஜன பெரமுனவிற்கு அதிக பலம் உள்ள காரணத்தினால் அவர்களும ராஜபக்ஷர்களுக்கு சார்பாகவே செயற்படுவார்கள்.
பாராளுமன்றில் பெரும்பான்மை தரப்பினரது ஆதரவு கிடைக்கப்பெறுமாயின் இடைக்கால ஜனாதிபதி பதவியை ஏற்க தயார்.தற்போதும் பொதுஜன பெரமுன முன்னணி உட்பட பெரும்பாலான தரப்பினர் ஜனாதிபதி,பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு வலியுறுத்தியுள்ளார்.ஒருபோதும் கட்சிக்கு முரனாக செயற்பட போவதில்லை
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறந்த தரப்பினரை ஒன்றினைத்து அரசியல் ரீதியில் புதிய சக்தியை உருவாக்குவது சிறந்ததாக அமையும்.சிறந்த அரசியல் கலாச்சாரம் குறித்து நாட்டு மக்கள் அவதானம் செலுத்த வேண்டும்.தற்போதைய நெருக்கடியான சூழநிலையை கருத்திற்கொண்டு சகல அரசியல் கட்சிகளும் நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து சிறந்த தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM