முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும்  முன்னாள் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆலோசகர் அஜித் நிசாந்த ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கினை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி  நிசாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இருவரும் 2004 ஆண்டு காலப்பகுதியில்  விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின்    53.3 மில்லியன் ரூபாவினை மோசடி செய்துள்ளதா குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.