ஜனாதிபதி கோட்டாவின் பதவி விலகலை உத்தியோகபூர்வமாக இன்று அறிவிப்பார் சபாநாயகர்

15 Jul, 2022 | 07:30 AM
image

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிவிலகினார் என்பதை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று காலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை சபாநாயகருக்கு நேற்று வியாழக்கிழமை (14) அனுப்பி வைத்துள்ளார்.

சட்ட ஆலோசனைகளுக்காக சபாநாயகர் குறித்த கடிதத்தை சட்டமாதிபருபக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் சபாநாயகர் நாட்டு மக்களுக்கு உத்தியோகபூர்வமாக இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

போராட்டகாரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டதை தொடர்ந்து நாட்டிலிருந்து மாலைதீவிற்கு வெளியேறிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அங்கிருந்து நேற்று வியாழக்கிழமை (14) மாலை சிங்கப்பூர் சென்றடைந்ததை தொடர்ந்து தனது பதவி விலகலை சபாநாயகர் ஊடாக அறிவித்துள்ளார்

இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திற்கு பின்னர் பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் பதவியை இராஜினாமா செய்த முதலாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ  கருதப்படுகிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈ.பி.எப்., ஈ.ரீ.எப். இணைப்புக்கு எதிர்ப்பு; தொழிற்சங்கங்கள்...

2026-07-17 14:34:16
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள் : வழக்கு...

2026-07-17 16:18:43
news-image

புகைப்பிடிப்பதால் தினமும் 50 உயிரிழப்புகள்; ஆண்டுக்கு...

2026-07-17 16:19:13
news-image

எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது...

2026-07-17 16:19:41
news-image

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படும்...

2026-07-17 16:20:09
news-image

மண்ணெண்ணெயில் இயங்கிய 100 பஸ்கள் அடையாளம்;...

2026-07-17 22:26:04
news-image

அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு...

2026-07-17 22:20:42
news-image

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு...

2026-07-17 22:08:58
news-image

தொழிற்கல்வியை வலுப்படுத்த 2027 வரவுசெலவுத் திட்டத்தில்...

2026-07-17 22:06:56
news-image

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும்...

2026-07-17 21:48:04
news-image

சிறுபான்மைக் கட்சிகளின் புதிய கூட்டணி எமக்குத்...

2026-07-17 14:35:02
news-image

ஊழியர்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது...

2026-07-17 16:33:07