கிளிநொச்சி ஸ்ரீநகர் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் மாணவர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இன்று கதவடைப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

பாடசாலையில் தரம் 5 கற்பிக்கும் ஆசிரியருக்கு திடீர் இடமாற்றம் வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே பாடசாலை பிரதான வாயிலை மூடி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதில் ‘பாடசாலையில் ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்ற நிலையில், திடீரென தரம் 5 கற்பிக்கும் ஆசிரியருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான சரியான தீர்வு கிடைக்கவேண்டும்’ எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

- நிபோஜன்