அக்கரைப்பற்று நீதிமன்றத்தையும் நீதிவானையும் அவமதித்த நபருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிவானும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான நளினி கந்தசாமி ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

நேற்று மன்றில் ஆஜர்படுத்தியபோதே மேற்படி தீர்ப்பை வழங்கினார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த வருடம் ஜூலை மாதம் 15 ஆம் திகதி அப்போதிருந்த அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகவும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல் பாலமுனையை சேர்ந்த நபரொருவரை மன்றில் விசாரணை செய்யும் போது அந்நபர் நீதிமன்றத்தையும் நீதிவானையும் அவமதிக்கும் வகையில் நடந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தரால் நீதிபதியையும், நீதிமன்றத்தையும் அவமதித்த நபருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு வழக்கு நடைபெற்றுவந்த நிலையிலேயே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.