ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் காதலி மீண்டும் கர்ப்பம் ?

Published By: Vishnu

14 Jul, 2022 | 02:40 PM
image

ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டினின் காதலி எனக்­ கூ­றப்­படும் அலினா கெபேவா மீண்டும் கர்ப்­ப­மா­கி­யுள்ளார் என தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

யுக்ரைன் மீதான ரஷ்ய தாக்­கு­தல்கள் தொடர்ந்து வரும் நிலையில் இத்­த­க­வலும் வெளி­யா­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. 

ஜெனரல் எஸ்.வி.ஆர். எனும் டெலி­கிராம் அலை­வ­ரி­சை­யொன்றில் இந்த செய்தி முதலில் வெளி­யா­கி­யது. 

2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்­டி­களில் தங்கப் பதக்கம் பெற்ற அலினா கபே­வா­வுக்கு தற்­போது 39 வயது, ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டி­னுக்கு தற்­போது 69 வயது என்­பது குறிப்­பி­டத்­கத்­கது.

லியுட்­மிலா ஷ்கிரேப்­னேவா என்­ப­வரை 1983 ஆம் ஆண்டு திரு­மணம் செய்­தவர் விளா­டிமிர் புட்டின். இத்­தம்­ப­தி­யி­ன­ருக்கு இரு மகள்கள் உள்­ளனர். 2014 ஆம் ஆண்டு புட்­டினும் லியுட்­மி­லாவும் விவா­க­ரத்துச் செய்­தனர். 

அதே­வேளை, ரஷ்­யாவின் முன்னாள் ஜிம்­னாஸ்டிக் வீராங்­கனை அலினா கெபே­வாவை விளா­டிமிர் புட்டின் காத­லித்து வரு­கிறார் எனவும் இவர்­க­ளுக்கு இடையில் திரு­மண நிச்­ச­ய­தார்த்தம் நடை­பெற்­றது எனவும் செய்தி வெளி­யா­கி­யது. எனினும், அச்­செய்தி நிரா­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.

எனினும், அலினா கபேவா மூலம் புட்­டி­னுக்கு 4 பிள்­ளைகள் உள்னர் என செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன. 

இந்­நி­லையில், அலினா கபேவா மீண்டும் கர்ப்­ப­ம­டைந்­துள்ளார் எனவும் ஜெனரல் எஸ்.வி.ஆர். அலை­வ­ரிசை தெரி­வித்­துள்­ளது. 

எனினும், ஏற்கெனவே பல பிள்ளைகள் உள்ள நிலையில், இக்கர்ப்பம் குறித்து புட்டின் மகிழ்ச்சியடையவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47