சிசேரியன் சத்திரசிகிச்சை அறையில் கர்ப்பிணி பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவரை பிரேஸில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
றியோ டி ஜெனெய்ரோ நகரிலுள்ள 'டா முல்ஹெர்' வைத்தியசாலையில் இப்பாலியல் வல்லுறவுச் சம்பவம் இடம்பெற்றதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
32 வயதான ஜியோவனி குய்ன்டெல்லா பெஸேரா எனும் மருத்துவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சிசேரியன் சத்திரசிகிச்சைக்கான மயக்கமருந்தை செலுத்திய பின்னர், இப்பெண்ணை வைத்தியர் பெஸேரா வல்லுறவுக்குட்படுத்தினார் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பெண்ணை வல்லுறவுக்குட்படுத்துவதை மேற்படி வைத்தியர் வீடியோவிலும் பதிவு செய்துகொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இப்பெண்ணின் கணவரை சத்திரசிகிச்சை அறையிலிருந்து வெளியேற்றிவிட்டு இக்குற்றச்செயலில் மேற்படி வைத்தியர் ஈடுபட்டுள்ளார்.
குறித்த வைத்தியரை பொலிஸார் கைது செய்தபின், அவ்வைத்தியர் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டபோது, அவரை பெண்ணின் கணவர் அடையாளம் கண்டார்.
இதேவேளை குறித்த தினத்தில் மேலும் இரு கர்ப்பிணிகள் மீதும் மேற்படி வைத்தியர் பாலியல் ரீதியான தாக்குதல்ளை நடத்தியுள்ளார் என முறபை;பாடு செய்யப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகளுக்கு அதிகளவான மயக்கமருந்தை மேற்படி மருத்துவர் வழங்குவது குறித்து வைத்தியசாலை ஊழியர்கள் கவலையடைந்திருந்தனர் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.
இதுபோன்ற சம்பவத்தை இதற்குமுன் நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM