லுணுகலையில் தொடர் குடியிருப்பில் தீ விபத்து

14 Jul, 2022 | 03:16 PM
image

எம்.செல்வராஜா 

லுணுகலைபொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டேல்பெத்த கிராம சேவகர் பிரிவின் சுவிண்டன் பெருந்தோட்டப் பகுதியில் தொடர் குடியிருப்பில் தீ ப்பரவல் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு 8.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த வேளையில் தொடர் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது அயலில் உள்ள இரண்டு வீடுகளுக்கும் தீ பரவியதால் 3 வீடுகளும் முற்றாக தீக்கிரையாகியுள்ளதோடு வீட்டு தளபாடங்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்துள்ளன.

சுவிண்டன் தோட்ட இளைஞர்கள் மற்றும் பொது மக்களின் பாரிய முயற்சியினால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீ பரவியமைக்கான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பலத்த சேதங்கள் ஏற்பட்டிருப்பதால் சேத விபரங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் உறவினர் வீடுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right