கோட்டா- ரணில் சதிகளுக்கு பொதுஜன பெரமுன துணைபோகக் கூடாது - முன்னிலை சோசலிசக் கட்சி

Published By: T. Saranya

14 Jul, 2022 | 02:55 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மக்களாணையினை இழந்து விட்டது. மக்களால் கிடைக்கப்பெற்ற அதிகாரம் முற்றுப்பெற்றுவிட்டது.

பொதுஜன பெரமுன தரப்பினர் சுயமதிப்பீடு செய்து அவர்கள் திருத்திக்கொள்ளுவதற்காக முன் வருபவர்களாக இருந்தால் கோட்டா- ரணில் சதிகளுக்கு துணைப்போகக் கூடாது என்று முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.

முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரதம செயலாளர் குமார் குணரத்தினம் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

கோட்டாபய ராஜபக்ஷ 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெற்று கொண்ட மக்கள் ஆணை இரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவுக்கு கிடைக்கப்பெற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரமும் முடிந்துள்ளது. 

பொதுஜன பெரமுன சுயமதிப்பீடு செய்து அவர்கள் திருத்திகக்கொள்ளுவதற்கு முன் வருபவர்கள் இருந்தால் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க அவர்களின் சதிகளுக்கு துணை போக முடியாது.

கடந்த இரண்டரை வருடங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் நீங்கள். சுயமதிப்பீடு செய்து போராட்டத்திற்கு இடையூறு விளைவிக்காது இணக்கமான சூழல் ஒன்றை உருவாக்குவதற்கு முன் வர வேண்டும்.

ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ அல்லது பஷில் ராஜபக்ஷ அவர்களின் சதிகளில் சிக்காமல் இருக்க வேண்டும்.

அரசியல் அமைப்புகளில் உள்ள சரத்துக்குள் மறைந்து கொண்டு நாட்டில் சர்வாதிகார போக்கை உருவாக்குவதற்கு முயற்சிக்கும் ரணில் விக்ரமசிங்க உட்பட கோட்டாபய ராஜபக்ஷ சதிகளை தோற்படிப்பதற்கும் பாராளுமன்றத்திலும் அனைத்து இடங்களிலும் நாம் ஒன்றிணைவோம். 

போராட்டத்தினால் அல்லது போராட்டக்காரர்களால் நாடு நெருக்கடிக்குள் தள்ளப்படவில்லை. கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் தீர்மானங்கள்  நெருக்கடிக்கு பிரதான காரணம். 

பெரும்பான்மை மக்களின் விருப்பத்தினால், ஆதரவினாலும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றது.

நாட்டு மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் நம்பிக்கையான, ஸ்திரமான அரசாங்கத்தை வெளிப்படுத்த நாட்டில் புதிய சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும்.

இதற்கமைய நாட்டின் நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான எதிர்க்கட்சி உட்பட மற்ற ஏனைய கட்சிகளும் இணைந்து நாட்டின் ஏனைய தரப்பினருடன் ஒன்றினைந்து மக்கள் எழுச்சி போராட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும்.

மேலும் மக்கள் எழுச்சி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுக்கும் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு அதனை நிறைவேற்ற கூட்டாக முன்வர வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹரக்கட்டா, குடு சலிந்து ஆகியோரின் பாதுகாப்பு...

2023-03-22 17:08:17
news-image

ஒருவரின் கையை வெட்டி தன்னுடன் எடுத்துச்...

2023-03-22 17:07:15
news-image

வெசாக் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக...

2023-03-22 16:56:47
news-image

ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்ற முயற்சி செய்தேனா?...

2023-03-22 17:12:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த...

2023-03-22 16:14:25
news-image

கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தின் பெரும் தொகை...

2023-03-22 16:08:16
news-image

வெளியானது 5 ஆம் ஆண்டு புலமைப்...

2023-03-22 16:44:18
news-image

எழிலன் வழக்கு மீண்டும் தவணையிடப்பட்டது :...

2023-03-22 15:41:42
news-image

லிஸ்டீரியா நோய் நிலைமை நாட்டில் இல்லை...

2023-03-22 15:37:40
news-image

சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவளிக்கவேண்டும்...

2023-03-22 15:07:09
news-image

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மேலதிக...

2023-03-22 14:53:10
news-image

வவுனியாவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

2023-03-22 14:54:48