பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நிதிமோசடி விசாரணைப்பிரிவுக்கு வாக்குமூலமொன்றை அளிப்பதற்காக ஆஜாராகியுள்ளார்.

வாகன மோசடி குற்றத்துடன் தொடர்புடைய விசாரணையொன்றுக்கு வாக்குமூலமளிப்பதற்காகவே இவர் நிதிமோசடி விசாரணைப்பிரிவுக்கு வருகைத்தந்துள்ளார்.

 வாக்குமூலம் அளிப்பதற்கு முன் ஊடகவியலாளர்களிடம் சில கருத்துக்களை முன்வைத்துவிட்டு சென்றுள்ளார்.

அவர் தெரிவிக்கையில்,

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனின் 125 பில்லியன் மோசடியை விட நான் கொள்வனவு செய்த வாகன மோசடிதான் அரசாங்கத்துக்கு பெரிதாக தெரிகின்றது என குறிப்பிட்டுள்ளதோடு, தான் வாக்குமூலமளித்தப்பின் ஊடகவியலாளர்களை சந்திப்பதாகவும், நிதிமோடி விசாரணைப்பிரிவினர் தன்னை கைதுசெய்தால் நீதிமன்றத்தில் சந்திப்போம் என தெரிவித்துவிட்டு வாக்குமூலமளிப்பதற்கு சென்றுள்ளார்.