அடுத்த நடவடிக்கைகள்  குறித்து போதுமான கருத்தொருமிப்புடன் தீர்மானிக்க வேண்டும் - தேசிய சமாதானப் பேரவை வலியுறுத்துகிறது

13 Jul, 2022 | 10:52 PM
image

ஜனாதிபதி மாளிகை கடந்த சனிக்கிழமை மக்கள் இயக்க ( அறகலய ) போராட்டக்காரர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து ஜனாதிபதியினாலும் பிரதமரினாலும் பயன்படுத்தப்படுகின்ற அலுவலக கட்டிடங்களும் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

இதனிடையே ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச இன்று காலை வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார்.பிரதமரின் அலுவலகமும் ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் போராட்டக்காரர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டன.பாராளுமன்ற கட்டிடத்தொகுதியை ஆக்கிரமிப்பதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.இந்த சம்பவங்கள் எல்லாம்  இலங்கையில் தொடருகின்ற நெருக்கடியையும் நடைமுறையில் உள்ள அரசியல் நிறுவனங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதையும் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.

துரதிர்ஷ்டவசமாக, பாராளுமன்றத்தில் அண்மைக்காலங்களில் எமது எம்.பி.க்களின் அடாவடித்தனமான நடத்தைகள் ஜனநாயக நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை அருகச்செய்துவிட்டன.

இடம்பெறுகின்ற நிகழ்வுகள் புரட்சிகர தன்மைவாய்ந்தவையாக இருக்கின்ற போதிலும் கூட ஜனாதிபதியும் அரசாங்கமும் பாதுகாப்பு படைகளும் மெச்சத்தக்க அளவுக்கு பொறுமையை  கடைப்பிடித்ததை காணக்கூடியதாக இருந்தது.உயிரிழப்புகள் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் அக்கறை காட்டினார்கள்.அரச சொத்துக்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும். நாட்டின் சட்டத்தையும் அரசியலமைப்பையும் மதித்து நடக்க மக்கள் இணங்கவேண்டும்.எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கு மக்களுக்கு இருக்கும் உரிமைகள் அவசரகாலச்சட்டம் மற்றும் ஊரடங்குச்சட்டம் மூலமாக ஜனநாயக விரோதமான முறையில் படைபலத்தை பயன்படுத்தி ஒடுக்கப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.அராஜகத்தை தவிர்க்கும் வகையில் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டியது அவசியமாகும்.

 ஜனாதிபதியின் பதவிவிலகல், அவரின் இடத்துக்கு பதிலீடு ஆகியவை தொடர்பில் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கிடையில் இடம்பெறுகின்ற முரண்பாடான தொடர்பாடல்கள் குறித்து தேசிய சமாதானப் பேரவை அதிருப்தியும் கவலையும் அடைகிறது.இதையும் மூன்று வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதிக்கும்  அரசாங்கத்துக்கும் தேர்தல்களில் மக்களினால் வழங்கப்பட்ட ஆணைகள்  வலுவிழந்து போனதையும் அடிப்படையாகக் கொண்டு தேசிய சமாதானப் பேரவை அரசியல் தலைவர்கள்,சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் மதத்தலைவர்களினால் பிரேரிக்கப்பட்டதன் பிரகாரம் சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் ஒன்றை உடனடியாக அமைக்குமாறு கோருகிறது.

பிரதான அரசியல் கட்சிகள் தங்களுக்கிடையில் போதுமான கருத்தொருமிப்பின் அடிப்படையில் இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கக்கூடியவர்கள் குறித்து தீர்மானிப்பதே பொருத்தமானது.

நாடு எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மிகவும் பாரதூரமானவை என்பதால் இன்றைய தருணத்தில் கருத்தொருமிப்பின் அடிப்படையில் தீர்மானங்களை எடுப்பது முக்கியமானதாகும்.மக்களின் ஆதரவைப் பெறக்கூடியமுறையிலும்  விரைவில் நேர்மையானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான களத்தை அமைக்கக்கூடியவகையிலும் ஊழலற்ற பொருளாதார மறுசீரமைப்பு, அரசியல் சீர்திருத்தம் மற்றும் பன்முக சமூகச விழுமியங்கள்,பொறுப்புக்கூறல் கடப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில்  அதிகாரப்பரவலாக்கல் ஆகியவற்றுக்கான கட்டமைப்பு ஒன்றை வகுக்கவேண்டிய தேவை இருக்கிறது.

இவ்வாறு செய்தால் எதிர்காலத்துக்கான திட்டவரைவு ஒன்று இலங்கையிடம் இருக்கிறது என்று சர்வதேச சமூகம் நம்பிக்கை வைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்.தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்தும் சச்சரவான அரசியலில் இருந்தும் நாடு வெளிக்கிளம்புவதை உறுதிசெய்யக்கூடியதாக உதவிகள் எமக்கு கிடைக்க வழிபிறக்கும்.இதுவே தற்போதைய உடனடித்தேவையாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெசாக் தினம்

2024-05-22 20:08:47
news-image

வல்லரசு நாடுகளுக்கு சவாலாக உலகை தன்...

2024-05-22 10:53:56
news-image

நல்லிணக்கத்துக்கு ஜனாதிபதியின் உள்ளார்ந்த ஈடுபாடு அவசியம்

2024-05-21 12:45:05
news-image

கண்ணோட்டம் : சட்டம் பற்றிய அறிவினை...

2024-05-21 09:16:17
news-image

படையினரிடம் சரணடைந்து காணாமலாக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகள்...

2024-05-21 03:53:30
news-image

இரத்தினபுரி தும்பர தோட்ட சம்பவம்; பத்தோடு...

2024-05-21 03:42:15
news-image

சவால்களுக்கு மத்தியில் மீண்டுவரும் இலங்கை 

2024-05-20 18:35:04
news-image

இனவாதிகளை சந்தோஷப்படுத்தியுள்ள புலிகள் அமைப்பின் மீதான...

2024-05-20 17:33:41
news-image

சிங்கப்பூரின் நவீனமயமாக்கத்துக்கு தந்தை வழியில் தன்னை...

2024-05-21 14:14:48
news-image

அரசானது சிவில் சமூக அமைப்புக்களின் உதாரணத்தை...

2024-05-20 12:41:06
news-image

2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம்...

2024-05-20 14:46:47
news-image

சமஷ்டி உத்தரவாதம் வழங்கப்படும் வரையில் ஜனாதிபதி...

2024-05-20 02:49:11