( எம்.எப்.எம்.பஸீர், நா.தனுஜா)
காலிமுகத்திடலிலும், பிரதமர் அலுவலகம் முன்பாகவும் ஒன்றுகூடிய போராட்டக்காரர்களில் ஒருபகுதியினர் பாராளுமன்றத்தை நோக்கி நகர்ந்ததுள்ளதால், பாராளுமன்றுக்கு உள் நுழையும் வீதியின் சுற்று வட்டப் பகுதியில் இன்று ( 13) மாலை கடும் பதற்றம் நிலவியது.
அரச நிர்வாகத்துடன் தொடர்புடைய ஸ்தலங்களை போராட்டக் காரர்கள் தொடர்ச்சியாக தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நிலையிலேயே அவர்கள் பாராளுமன்றம் நோக்கி நகர்ந்துள்ளனர்.
இந் நிலையில், பாராளுமன்ற நுழைவு சுற்றுவட்டம் முதல் பல அடுக்கு பாதுகாப்பினை பொலிஸாரும் முப்படையினரும் அமைத்துள்ள நிலையில், நிலைமை தற்போது தீவிரமடைந்துள்ளது.
போராட்டக் காரர்கள் முதலில் பாராளுமன்ற நுழைவு சுற்றுவட்டத்திற்கு அண்மையில் ஒன்றுகூடினர்.
பின்னர் பாராளுமன்றத்திற்குள் உள்நுழையும் வீதி ஊடாக பாராளுமன்ற திசையை நோக்கி வீதித் தடைகள், பாதுகாப்பு அடுக்குகளை தாண்டி முன்னேறினர். இதன்போது முன்னோக்கி நகர்ந்த போராட்டக் காரர்களுடன் பாதுகாப்புத்தரப்பினருடன் மோதல் நிலையேற்பட்டது.
அவ்வேளையில் பாராளுமன்றத்திற்குள் கட்சித்தலைவர்கள் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த பின்னணியில், பாதுகாப்புத்தரப்பினரால் போராட்டக்காரர்கள்மீது கண்ணீர்ப்புகைப்பிரயோகம் நடாத்தப்பட்டது. நீர்த்தாரை பிரயோகமும் நடாத்தப்பட்டது.
போராட்டக் காரர்கள் இரு நிரந்தர தடுப்பு வேலிகள் மற்றும் பாதுகாப்பு அரண்களை தகர்த்து பாராளுமன்றம் நோக்கி முன்னேறியிருந்ததுடன், சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் அருகே ஒன்று திரண்டிருந்தனர்.
இதன்போது பலர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது. சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான போராட்டக் காரர்கள் எதனையும் பொருட்படுத்தாது தொடர்ந்து முன்னேறிச் செல்ல முயல்கின்றமையால், பதற்றம் நீடிக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM