(நா.தனுஜா)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சமுகமளிக்காததன் காரணமாக 11 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை நடைபெறவிருந்த அமைச்சரவைக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டமையானது நாடு முகங்கொடுத்திருக்கும் எரிபொருள் நெருக்கடியைத் தீவிரப்படுத்தியுள்ளது.
எனவே 11 ஆம் திகதி மாலை நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின்போது மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சரினால் கடிதமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்பிரகாரம் அமைச்சரவையின் அனுமதிக்காக இவ்வாரம் மூன்று அமைச்சரவைப்பத்திரங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதனூடாக மத்திய வங்கி மற்றும் நிதியமைச்சு ஆகியவற்றின் ஆலோசனைகளின் பிரகாரம் நிதிச்சந்தையிலிருந்து 128 மில்லியன் டொலர்களைத் திரட்டுவதற்கு உள்நாட்டு வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
எனவே புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டதன் பின்னர் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு எரிபொருள் அவசர கொள்வனவில் ஈடுபடும்போது அதனை ஆட்சேபிக்கப்போவதில்லை என்ற உத்தரவாதத்தை வழங்குமாறு இதன்போது கட்சித்தலைவர்களிடம் கோரப்பட்டது.
இருப்பினும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட சிலர் அதனை நிராகரித்ததுடன், அமைச்சரவையின் அனுமதியின்றி தம்மால் எந்தவொரு உத்தரவாதத்தையும் வழங்கமுடியாது என்றும் குறிப்பிட்டனர். அதன் காரணமாக அவசர கொள்வனவிற்கு நிதி திரட்டுவதற்கான முயற்சி இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM