ஹொங்கொங் விவகாரத்தில் கனடா தலையிடக்கூடாது -சீனா

Published By: Rajeeban

12 Jul, 2022 | 04:17 PM
image

ஹொங்கொங் விவகாரத்தில் கனடா தலையிடக்கூடாது எனசீனா   வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஹொங்கொங்கில் சீன அதிகாரத்தின் கீழ் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலானி ஜொலி தெரிவித்துள்ளார்.கனடாவிற்கு ஹொங்கொங்குடன்  நேரடி தொடர்புள்ளது மூன்றுஇலட்சம் கனடா மக்கள் அங்கு வாழ்கின்றனர் 100க்கும் மேற்பட்ட கனடா நிறுவனங்கள் அங்குள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் உலக யுத்தத்தில் கனடா முதன்முதலில் போட்டியிட்ட இடம்ஹொங்கொங் இன்று கனடாவை சேர்ந்த 3இலட்சம் பேர் அங்கு வாழ்கின்றனர்,ஹொங்கொங் கனடாவின் முக்கிய இருதரப்பு வர்த்தக சகா மற்றும் முதலீட்டு சகா 100 கனடா நிறுவனங்கள் அங்குள்ளவை இதனை உறுதி செய்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரடி தொடர்புகள் மற்றும்நாங்கள் பகிரும்  சர்வதேச விழுமியங்கள் எங்கள் சமூகத்தினை வளப்படுத்துகின்றன என ஐக்கியப்படுத்துகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் கடந்த இரண்டு வருடகாலமாக நடைமுறையில் தேசிய பாதுகாப்பு சட்டம் காரணமாக உள்ள கருத்துசுதந்திரமும் மாற்றுக்கருத்துக்களை அமைதியான முறையில் வெளியிடும் உரிமையும் ஹொங்கொங்கில் மறுக்கப்படுகின்றன என கனடாவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

25 வருடத்திற்கு முன்னர் தாங்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட சர்வதேச கடப்பாட்டை ஹொங்கொங் மற்றும் சீனாவின் மத்திய அதிகாரிகள் நிறைவேற்றவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்,அடிப்படை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகளவாள சுயாட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிப்பதற்கான அர்ப்பணிப்பு மனித உரிமைகள் அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை பின்பற்றுதல் ஆகியன 1997 இல் அவர்கள் அர்ப்பணித்தமை போல் இன்றும் ஹொங்கொங்கின்  ஸ்திரதன்மைக்கும் வளத்திற்கும் முக்கியமானவையாக காணப்படுகின்றன,நாளையும் அவை முக்கியமானவையாக காணப்படும்,25 வருடத்திற்கு பின்னரும் முக்கியமானவையாக காணப்படும் என கனடாவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கு  பதிலளித்துள்ள ஒட்டாவில் உள்ள சீன தூதரகம் வெளிச்சக்திகள் பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடக்கூடாது என தெரிவித்துள்ளது.ஹொங்கொங் சீனாவின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டு 25வருடங்களாகும் தினத்தன்றே சீனா இதனை தெரிவித்துள்ளது.

ஹொங்கொங் என்பது முற்றிலும் சீனாவின் உள்விவகாரம் எந்த வெளிச்சக்தியும் கருத்துக்கூற முடியாது கனடாவிற்கும்சீனாவிற்கும் இடையிலான ஆழமான உறவுகள் ஹொங்கொங் விவகாரத்தில் தலையிடுவதற்கான சாக்குப்போக்கை வழங்காது என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

1984 சீன பிரிட்டன் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தபடி 1997ம் ஆண்டு ஜூலை மாதம் சீனாவிடம் கையளிக்கப்பட்டது.

கூட்டு பிரகடனம் அடிப்படை உரிமைகள் அதிகளவு சுயாட்சி ஒரு நாடு இரு அமைப்பு முறை குறித்து தெரிவித்துள்ளது.

ஆனால் 25 வருடகாலத்தின் பின்னர் நாங்கள் முன்னர் அங்கீகரித்த நகரமாக ஹொங்கொங் இல்லை,என தெரிவித்துள்ள சீனாவிற்கான அனைத்து நாடாளுமன்ற கூட்டமைப்பு 2020 ஜூன் 30 நடைமுறைக்கு வந்த ஆபத்தான தேசிய பாதுகாப்பு சட்டம் அதிருப்தியாளர்களை தண்டிப்பதற்கும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கும் கருத்துசுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கும் நாட்டின் சுயாட்சியை குறைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது முதல் 183 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்,113 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன,50;க்கும் மேற்பட்ட சிவில் அமைப்புகள் கலைக்கப்பட்டுள்ளன பல ஊடகநிறுவனங்கள் செயற்படுவதை நிறுத்தியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்ட பின்னர் நாளை...

2024-09-17 11:43:12
news-image

டிரம்ப் கொலை முயற்சி - 12...

2024-09-17 10:40:52
news-image

நைஜீரியாவில் வெள்ளம் : சிறைச்சாலை சுவர்...

2024-09-17 11:03:16
news-image

புதுடெல்லிமுதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று ராஜினாமா:...

2024-09-17 10:12:24
news-image

ரஷ்ய ராணுவத்தினரால் அடிமைகள் போல் நடத்தப்பட்டோம்:...

2024-09-16 14:56:05
news-image

சீனாவின் ஷங்காயை தாக்கிய சூறாவளி ;...

2024-09-16 13:48:23
news-image

டிரம்பை கொலை செய்ய முயற்சித்தவர் உக்ரைன்...

2024-09-16 11:47:32
news-image

உத்தரபிரதேசத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து...

2024-09-16 09:30:51
news-image

டிரம்பை கொல்வதற்கு மீண்டும் முயற்சி-சந்தேக நபர்...

2024-09-16 07:11:47
news-image

நைஜீரியாவில் படகு விபத்து - 64...

2024-09-15 12:49:20
news-image

அந்தமான், நிக்கோபார் தீவுகளின் தலைநகரின் பெயரில்...

2024-09-14 13:32:32
news-image

முதன் முதலில் ஆபிரிக்காவில் குரங்கம்மை தடுப்பூசியை...

2024-09-14 12:19:04