(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியவுடன் ஆர்ப்பாட்டாரர்கள் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை ஆகிய தேசிய கட்டடங்களை பாதுகாப்பு தரப்பினரிடம் கையளிக்க வேண்டும்.
அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அரசியல் கட்டமைப்பில் தீர்மானம் எடுப்பதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வைத்துக்கொண்டு அனைத்தையும் வெற்றிக்கொள்ளலாம் என ஜனாதிபதி தன்னிச்சையாக செயற்பட்டதன் விளைவை தற்போது எதிர்கொள்கிறார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவறான நிர்வாகத்தினால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு எதிரான மக்கள் போராட்டம் வெற்றிப்பெற்றுள்ளது. மக்களின் எதிர்ப்பிற்கு முன்னால் எச்சக்தியாலும் நிலைத்து நிற்க முடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசியல் வரலாற்றில் எந்த அரச தலைவர்களையும் மக்கள் இந்தளவிற்கு எதிர்க்கவில்லை.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியவுடன், ஆர்ப்பாட்டகாரர்கள் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை ஆகிய தேசிய கட்டடங்களை பாதுகாப்பினரிடம் ஒப்படைக்க வேண்டும். ஜனாதிபதியின் பதவி விலகலை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
நாட்டில் தொடர்ந்து போராட்டங்கள் இடம்பெற்றால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு பெற முடியாது. சகல நெருக்கடியினையும் வெற்றிக்கொள்ள பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற மக்களின் அழுத்தமான கோரிக்கை வெற்றிப்பெற்றுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM