இலங்கையில் சுமுகமான ஆட்சி மாற்றம் இடம்பெறுவதை உறுதிப்படுத்துங்கள் - ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம்

Published By: Vishnu

12 Jul, 2022 | 07:26 PM
image

(நா.தனுஜா)

இலங்கையில் சுமுகமான ஆட்சி மாற்றமொன்று இடம்பெறுவதையும், மிகவும் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு உரியவாறு தீர்வு காணப்படுவதையும் உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் பதவி விலகுமாறு வலியுறுத்திய நாடளாவிய ரீதியில் பெருமளவான மக்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த போராட்டத்தை அடுத்து, இன்றைய தினம் பதவி விலகுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

அதன்விளைவாக தற்போது சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை உள்ளடங்கலாக பொருளாதார ரீதியில் அடைந்துகொள்ளப்படக்கூடிய முன்னேற்றங்களைப் பாதிக்கத்தக்க அரசியல் உறுதிப்பாடற்ற நிலையொன்று தோற்றம்பெற்றுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்து இலங்கையின் தற்போதைய நிலைவரத்தை மிகவும் உன்னிப்பாக அவதானித்துவருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸின் சார்பில் ஐ.நாவின் பிரதி ஊடகப்பேச்சாளர் ஃபர்ஹான் ஹக்கினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

'ஐ.நாவின் செயலாளர் நாயகம் இலங்கை மக்களுடனான தனது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பதுடன் சுமுகமான ஆட்சிமாற்றம் இடம்பெறுவதையும் பொருளாதார நெருக்கடிக்கு உரியவாறான தீர்வுகாண்பதையும் முன்னிறுத்தி அனைத்துத்தரப்பினரும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்' என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் போராட்டத்தின்போது இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்கள் தொடர்பில் கடும் கண்டனம் வெளியிட்டிருக்கும் ஐ.நா செயலாளர் நாயகம், அமைதியைப் பேணவேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக்காண்பித்து, வன்முறைச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைப் பொறுப்புக்கூறச்செய்யவேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீர்கொழும்பு சிறை மோதலுக்கு அரசாங்கமே பொறுப்பு;...

2026-07-12 15:27:29
news-image

சகல நீதிபதிகளினதும் பதவிக்காலம் 2 ஆண்டுகள்...

2026-07-12 16:07:41
news-image

டெங்கு தடுப்பு: மாணவர்கள் முழுக் கை,...

2026-07-12 20:12:01
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு விஜயதாசவே பொறுப்பு...

2026-07-12 13:46:25
news-image

இராணுவ அதிகாரிகள் மீதான அரசியல் பழிவாங்கலுக்கு...

2026-07-12 19:03:48
news-image

இராகலையில் வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களுக்கு நிரந்தர...

2026-07-12 17:46:58
news-image

இலங்கை சொகுசு பேருந்து சங்கத்தினால் 'மாவதே...

2026-07-12 17:28:02
news-image

மஹமோதர வைத்தியசாலையை சிறைச்சாலையாக்கும் தீர்மானம் மறுபரிசீலனை...

2026-07-12 17:21:07
news-image

தமிழரசின் மறைந்த முன்னாள் தலைவர் இரா....

2026-07-12 17:19:33
news-image

ஓய்வு பெறும் சுவிட்சர்லாந்து உயர்ஸ்தானிகருக்கு இலங்கைத்...

2026-07-12 16:44:33
news-image

பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கை குற்றச்செயல்களுடன்...

2026-07-12 16:11:46
news-image

ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து -...

2026-07-12 16:11:06