சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 55 பேர் ஆழ்கடலில் விபத்தில் சிக்கிய நிலையில் மீட்பு

Published By: Digital Desk 5

12 Jul, 2022 | 07:22 PM
image

(எம்.மனோசித்ரா)

சட்ட விரோதமாக கடல் மார்க்கமாக நாட்டிலிருந்து வெளியேற முற்பட்டு , நடுக்கடலில் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த 55 பேர் கடற்படையினரால் மீட்க்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்க்கப்பட்ட அனைவரும் (12) செவ்வாய்கிழமை முற்பகல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 8 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பின் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிப்படகொன்று அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் , குறித்த படகிலுள்ளவர்களை மீட்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கடற்றொழில் மற்றும் நீர்வளத் திணைக்களத்தினால் , கடற்படை தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பராக்கிரமபாகு என்ற கப்பல் குறித்த படகினை மீட்க்கச் சென்றுள்ளது. இதன் போது ஆழ்கடல் பகுதியில் மிகக் கொந்தழிப்பான பகுதியில் மிதந்து கொண்டிருந்த படகிலிருந்து 55 பேர் ஆபத்தான நிலைமையிலிருந்து மீட்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 ஆட்கடத்தல்காரர்கள் 46 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 6 சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர்.

இவ்வாறு சட்ட விரோதமாக நாட்டிலிருந்து வெளியேற பயன்படுத்தப்பட்ட குறித்த படகு ஆழ்கடலில் விபத்திற்குள்ளாகி சேதமடைந்ததால் , அதற்குள் கடல் நீர் புகுந்து மூழ்கும் அபாயத்தில் இருந்தது.

அத்தோடு இந்த படகிலிருந்தவர்கள் பல நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் இன்றி இருந்ததையும் அவதானிக்க முடிந்தது. இவ்வாறு உயிர் ஆபத்தான நிலையில் மீட்க்கப்பட்டோருக்கு  முதலுதவிகள் வழங்கப்பட்டு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

கடற்படையினரால் மீட்க்கப்பட்ட 3 - 54 வயதுக்கு இடைப்பட்ட இவர்கள் திருகோணமலை, மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் கற்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பாந்தோட்டை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58