தற்போது நிலவும் இக்கட்டான நிலையில் அவுஸ்திரேலிய அணியுடனான கிரிக்கெட் தொடரை நடத்தியமைக்காக அவுஸ்திலிய அணியின் வீரர் டேவிட் வோர்னர் இலங்கையர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்கிராம் சமூகத்தளத்தில் இது குறித்து கருத்துவெளிட்டுள்ள டேவிட்வோர்னர்,
அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விருப்புடன் கிரிக்கெட் தொடரை விளையாடியமைக்கு நன்றி கூறுகின்றது.
"உங்கள் அற்புதமான நாட்டைப் பற்றி நான் விரும்புவது என்னவெனில், நீங்கள் எந்த சூழ்நிலையிலும் சிரித்த முகத்துடனேயே இருப்பீர்கள். அத்துடன் உபசரிக்கும் நோக்கத்துடடேனேயே இருக்கின்றீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திலேிய அணியை இலங்கை அரவணைத்ததையும் இந்த கிரிக்கெட் சுற்றுப் பயணத்தையும் நாம் மறக்க மாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, காலி கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே இடம்பெற்ற அரச எதிர்ப்பு போராட்டங்களின் சத்தத்தில் இருந்து எம்மால் மீள முடியாதுள்ளதென அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தலைவர் பெட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
"இது ஒரு எதிர்ப்பிலிருந்து ஒரு கட்சியாக மாறும்போது நீங்கள் கேட்கலாம். ஹோட்டலில் உள்ள ஊழியர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சிலருடன் அரட்டை அடிப்பது, மக்களின் கஷ்டங்களை நாங்கள் உணர்கிறோம், அது மிகவும் கடினமானது,” என்று அவர் மேலும் கூறினார்.
நாம், ஹோட்டல்களில் தங்கியிருக்கும் போது ஊழியர்கள், சாரதிகள் மற்றும் சிலருடன் பேசும் போது மக்களின் கஷ்டங்களை புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. அது மிகவும் கடினமானது என பெட் கம்மின்ஸ் மேலும் குறிப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM