அ.தி.மு.கவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே பழனிச்சாமி  தெரிவு  - பொதுக்குழுவில் தீர்மானம்

Published By: Digital Desk 4

11 Jul, 2022 | 09:19 PM
image

சென்னையில் இன்று கூடிய அ.தி.மு.கவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி  தெரிவு  செய்யப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிககப்பட்டிருக்கிறது.

சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவின்படி அ.தி.மு.க கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி  மஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு 98 சதவீத பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்குபற்றினர். பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு பிரத்யேக அடையாளங்களுடன் கூடிய மின்னணு அடையாள அட்டை வழங்கப்பட்டது. கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பொதுக்குழு மற்றும் செயற்குழுவிற்கு தலைமை வகித்து கூட்டத்தை தொடங்கி வைத்தார். 

கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னையன் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் பதினாறு தீர்மானங்களை வாசித்தார். அதனை முன்னாள் அமைச்சர் செம்மலை முன்மொழிந்தார். இதனைத் தொடர்ந்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி  தெரிவு  செய்யப்படும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. இதற்கு பொதுக்குழு உறுப்பினர்களின் குரல் வழி ஆதரவு மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக  எடப்பாடி கே பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

அ.தி.மு.கவின் கட்சி விதிகளின்படி பொதுச் செயலாளர் தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு ஏற்ப கட்சியின் பொதுச் செயலாளருக்கான தேர்தலில் எடப்பாடி கே பழனிசாமி போட்டியிடுகிறார். இதற்கான தேர்தல் திகதி விரைவில் அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்படும் என தெரிய வருகிறது.

இந்நிலையில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்றால் பத்து மாவட்ட செயலாளர்கள் வேட்பு மனுவை முன்மொழிய வேண்டும் என கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக அ.தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே பழனிச்சாமி நிரந்தரமாக தேர்ந்தெடுக்கப்படுவார் என அக்கட்சியின் மூத்த மற்றும் முன்னணி நிர்வாகிகள் உறுதிபட தெரிவித்திருக்கிறார்கள்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாவது  தலைவராக எடப்பாடி கே பழனிச்சாமி அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு அவரது ஆதரவாளர்களும், கட்சியின் தொண்டர்களும் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

அ.தி.மு.கவின் இடைக்கால பொதுசெயலாளராக தெரிவு செய்யப்பட்ட எடப்பாடி கே பழனிச்சாமிக்கு, பா.ம.க கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டொக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பல அரசியல் கட்சியின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52