பெற்றோல் வரிசையில் நின்றவர் இளைப்பாறச் சென்ற நிலையில் மயங்கி விழுந்து மரணம்

Published By: Digital Desk 5

11 Jul, 2022 | 04:25 PM
image

வவுனியாவில் பெற்றோல் வரிசையில் நின்று விட்டு இளைப்பாறுவதற்காகச் சென்றவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.

இன்று (11) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த 5 தினங்களாக பெற்றோல் வழங்கப்படாத நிலையில் மோட்டர் சைக்கிளை அரச உத்தியோகத்தர்களுக்கான வரிசையில் நிறுத்தி விட்டு குடும்பஸ்தர் ஒருவர் எரிபொருளுக்காக காவல் நின்றுள்ளார்.

இன்றும் (11) பெற்றோல் கிடைக்காமையால் நீண்ட நேரம் வரிசையில் நின்று விட்டு இளைப்பாறுவதற்காக நகரசபை முன்பாக உள்ள கடைப் பகுதிக்கு சென்ற போது குறித்த குடும்பஸ்தர் மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து, அவரை அருகில் நின்ற மோட்டார் சைக்கிளில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மரணமடைந்தவர் வவுனியா நகரசபையில் சுகாதார ஊழியராக கடமையாற்றும் வவுனியா, கொக்குவெளி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் செல்வகுமார் (வயது 44)  என்பவராவார்.

மரணமடைந்தவரின் மோட்டார் சைக்கிள் பெற்றோல் வரிசையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58