(எம்.வை.எம்.சியாம்)
ஊடகவியலாளர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையில் இவ்விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஊடகவியாளர்கள் தாக்கிய சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 9ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் மீது பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் தாக்குதல் நடத்தினர்.
அதன்படி குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொதுச் சேவை ஆணைக்குழுவின் மறைமுக அங்கீகாரத்திற்கு உட்பட்டு பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM