இன, மத சாயமற்ற மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசு உதயமாக வேண்டும் - இராதாகிருஷ்ணன்

Published By: Vishnu

11 Jul, 2022 | 05:18 PM
image

" இன, மத சாயமற்ற - மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசு உதயமாக வேண்டும். ஊழல் அற்ற ஒருவர் அரச தலைவராக வேண்டும். அதற்கான சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது." என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

அட்டனில் 11 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, 

" 9 ஆம் திகதியென்பது, இலங்கையில் மாற்றங்கள் நிகழும் நாளாக மாறியுள்ளது. மே 9 மஹிந்த பதவி விலகினார். ஜுன் 9 பஸில் பதவியை விட்டு பறந்தார். ஜுலை 9 பதவி விலகும் அறிவிப்பை ஜனாதிபதி கோட்டா விடுத்தார்.

அதுமட்டுமல்ல பௌத்த பிக்குகளால்  முன்னிலைப்படுத்தப்பட்ட ஜனாதிபதி , பௌத்த தேரர்களாலும், வாக்களித்த மக்களாலும் விரட்டியடிக்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது. இலங்கை அரசியல் வரலாற்றில் இது முக்கிய திருப்புமுனையாகும். 

மக்களுக்கு தகவல் அறியும் உரிமை இருக்கின்றது. அந்த பணியை ஊடகங்கள் ஆற்றுகின்றன. ஜனாதிபதி பதவி விலகுவதில் ஊடகங்களின் பங்கும் உள்ளது.

நல்ல வேலையை அவை செய்துள்ளன. அப்படி இருக்கையில் போராட்டக்களத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். பாதுகாப்பு வழங்க வேண்டியவர்களே, தாக்குதல் நடத்தியமை கவலைக்குரிய விடயமாகும்.

மஹிந்த ஆட்சியில் ஊடக அடக்குமுறை தலைவிரித்தாடியது. நியுஸ்பெஸ்ட் ஊடக அதிக அச்சுறுத்தலை எதிர்கொண்டிருந்தது.  தற்போதும் அந்நிறுவனத்தின் ஊடகர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இது ஜனநாயகத்துக்கு விழுந்த அடியாகும்.

அடுத்து வரும் நாட்களில் அரசியல் மாற்றங்கள் இடம்பெறவுள்ளன. நாடாளுமன்றமும் அவசரமாக கூடும். ஊழல் அற்ற ஒருவர், அரச தலைவராக வேண்டும். அனைவரும் ஒன்றுபட வேண்டும்." - என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37