இலங்கை அணியின் மற்றுமொரு வீரருக்கு கொவிட் தொற்று

Published By: Vishnu

11 Jul, 2022 | 11:10 AM
image

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (எஸ்எல்சி) தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

பெத்தும் நிஸ்ஸங்கவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டமையடுத்து, நேற்று காலை அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது அவருக்கு கொவிட் தொற்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து நேற்று பிற்பகலில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 

கொவிட் தொற்றுக்குள்ளான பெத்தும் நிஸ்ஸங்கா உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு மாற்று வீரராக ஓஷத பெர்னாண்டோ இணைத்துக்கொள்ளப்படுவாரென கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இடம்பெற்று வரும் நிலையில், இதுவரை இலங்கையின் 6 வீரர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

ஜெஃப்ரி வெண்டர்சே, அசித்த பெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா, பிரவீன் ஜெயவிக்ரம, ஏஞ்சலோ மொத்யூஸ் ஆகியோர் ஏற்கனவே கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 60 மீற்றர்...

2025-03-22 04:00:36
news-image

இலங்கையில் நடைபெறவுள்ள தொடர் ஓட்டப் போட்டிக்கு...

2025-03-22 04:54:39
news-image

உலக உள்ளக அரங்க சம்பியன்ஷிப்பில் இத்தாலி...

2025-03-21 18:32:55
news-image

லாஓசை 22 வருடங்களுக்குப் பின்னர் வீழ்த்திய...

2025-03-21 21:12:57
news-image

ஒலிம்பிக் ஸ்தாபனத்தை கண்ணியத்துடன், பெருமையுடன் வழிநடத்துவதாக...

2025-03-21 15:13:08
news-image

அணிக்கு 6 பேர் கொண்ட “...

2025-03-21 14:47:13
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக...

2025-03-21 11:32:11
news-image

கோடிக்கணக்கான பணப்பரிசுக்கு குறிவைத்து ஐபிஎல் கிரிக்கெட்டில்...

2025-03-20 12:42:06
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தெரிவு...

2025-03-20 10:37:03
news-image

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வெளியிட்ட...

2025-03-20 02:56:03
news-image

இண்டியன் பிரீமியர் லீக் 2025இல் இலங்கை...

2025-03-19 20:05:18
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 2025 இலங்கையிலிருந்து...

2025-03-19 19:56:15