விம்பிள்டன் பட்டத்தை சுவீகரித்தார் நொவாக் ஜொகோவிச்

Published By: Digital Desk 5

11 Jul, 2022 | 01:00 PM
image

(என்.வீ.ஏ.)

விம்பிள்டனில் அண்மைக்காலமாக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவரும் நொவாக் ஜொகோவிச், ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசின் சவாலை முறியடித்து தொடர்ச்சியான நான்காவது தடவையாக சம்பியானானார்.

நொவாக் ஜோகோவிச்சின் விசா கோரிக்கையை நிராகரித்த அவுஸ்திரேலியா - Newsfirst

உலக தரவரிசையில் 3ஆம் இடத்திலுள்ள சேர்பிய வீரர் ஜொகோவிச் முதலாவது செட்டில் கிர்கியோசிடம் தோல்வியுற்ற போதிலும் இறுதியில் 4 - 6, 6 - 3, 6 - 4, 7 (7) - 6(3) என்ற புள்ளிகளைக் கொண்ட 3 - 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தார்.

விம்பிள்டனில் கணவான்கள் ஒற்றையர் பிரிவில் 35 வயதான ஜொகோவிச் வென்றெடுத்த 7ஆவது சம்பியன் பட்டம் இதுவாகும். விம்பிள்டனில் ரொஜர் பெடரேரே அதிக தடவைகள் (8) சம்பயினாகியுள்ளார்.

மேலும் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஜொகோவிச் வென்றெடுத்த 21ஆவது சம்பியன் பட்டம் இதுவாகும். கிராண்ட் ஸ்லாம் வரலாற்றில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரபாயல் நடால் 22 சம்பியன் பட்டங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

தன்னைவிட 8 வயது இளையவரான நிக் கிர்கியோசுடனான இந்த வருட இறுதிப் போட்டியில் முதல் செட்டில் தடுமாற்றத்துக்கு மத்தியில் விளையாடிய ஜொகோவிச், 4 - 6 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வி அடைந்தார்.

இதன் கராணமாக, சீமாட்டிகள் பிரிவில் போன்று கணவான்கள் பிரிவிலும் புதிய ஒருவர் சம்பினாவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது.

ஆனால், அடுத்த மூன்று செட்களிலும் கட்டுப்பாட்டுடனும் பொறுப்புணர்வுடனும் விளையாடிய அனுபவசாலியான ஜொகோவிச் 6 - 3, 6 - 4, 7 (7) - 6 (3) என வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.

லண்டனில் 30 பாகை செல்சியசுக்கு மெல் வெப்ப நிலை இருந்த போதிலும் அரச குடும்ப உறுப்பினர்கள், பிரபலங்கள் உட்பட 15,000 பேர்  மத்திய அரங்கில்   இறுதி ஆட்டத்தை கண்டு மகிழ்ந்தனர்.

Novak Djokovic sends retirement message to 'young guns' after Wimbledon  title triumph | Tennis | Sport | Express.co.uk

கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாததன் காரணமாக அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட நொவாக் ஜொகோவிச் இந்த வருடம் வென்றெடுத்த முதலாவது பிரதான டென்னிஸ் சம்பியன் பட்டம் இதுவாகும்.

கடந்த மே - ஜூனில் நடைபெற்ற பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் சம்பியனான நடாலிடம் கால் இறுதியில் ஜொகோவிச் தோல்வி அடைந்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குசல் பெரேராவுக்குப் பதில் நிரோஷன் திக்வெல்ல

2024-03-01 22:47:20
news-image

ரசிகர்களை கோபமூட்டிய ரொனால்டோவுக்கு ஒரு போட்டித்தடை,...

2024-03-01 17:22:29
news-image

ஆஸி. வீரர் க்றீன் ஆட்டம் இழக்காமல்...

2024-03-01 16:18:07
news-image

டெல்ஹியின் வெற்றியில் கெப், ஜொனாசன், ஷஃபாலி...

2024-03-01 15:05:04
news-image

ஒலிம்பிக் விழாவுக்கான பாதுகாப்பு திட்டங்களைக் கொண்ட...

2024-02-29 20:04:27
news-image

பங்களாதேஷுடனான தொடர்களில் திறமையை வெளிபடுத்த முடியும்...

2024-02-29 14:55:53
news-image

பங்களாதேஷுடனான முதல் இரண்டு ரி20 போட்டிகளில்...

2024-02-28 23:55:46
news-image

பொதுநலவாய செஸ் போட்டியில் இலங்கைக்கு ஒரு...

2024-02-28 21:19:17
news-image

ஒரு நூற்றாண்டுக்கு முன் பாரிஸ் நகரில்...

2024-02-28 17:19:56
news-image

றோயல் செலஞ்சர்ஸுக்கு இலகுவான வெற்றி

2024-02-28 13:57:45
news-image

கெப், ராதா பந்துவீச்சிலும் லெனிங், ஷஃபாலி...

2024-02-27 17:50:51
news-image

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வெற்றிகளைப்பெற்று அசத்தும்...

2024-02-27 16:51:10