எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் விசேட அறிவிப்பு

Published By: P. Saranya

11 Jul, 2022 | 09:46 AM
image

எரிவாயு சிலிண்டர் இன்று முதல் விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பில் 12 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 4,910 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அதிக விலைக்கு பிற தரப்பினரிடமிருந்து கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு நுகர்வோரிடம் அந்த நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்றும், நாளையும் கொழும்பு உட்பட சன நெரிசல்  அதிமாக உள்ள பகுதிகளில் லிட்ரோ எரிவாயு விநியோகம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 13 ஆம் திகதி முதல் ஏனைய பகுதிகளுக்கும் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படும்.

எரிவாயு விநியோக நடவடிக்கையில் இராணுவம், பொலிஸார் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்பதுடன் எரிவாயு விநியோகத்தை சிறந்த முறையில் முன்னெடுக்க பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என லிட்ரோ நிறுவனம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சத்துருக்கொண்டான், வந்தாறுமூலை படுகொலைகள் : சுயாதீன...

2026-09-09 19:48:51
news-image

இத்தாலிய கடற்படைக்குச் சொந்தமான ‘ITS GIUSEPPE...

2026-09-09 20:38:55
news-image

முச்சக்கரவண்டியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு...

2026-09-09 20:34:08
news-image

வாகன இலக்கத் தகடு தட்டுப்பாட்டுக்கு 6...

2026-09-09 16:01:03
news-image

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்திய...

2026-09-09 19:59:59
news-image

எல் நினோ தாக்கத்தால் நாட்டில் 8...

2026-09-09 19:41:21
news-image

இலங்கை மலையக இந்து குருமார்களுக்கும் ஜனாதிபதியின்...

2026-09-09 19:40:19
news-image

பம்பலப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான சட்டவிரோத...

2026-09-09 19:26:29
news-image

நேபாள வெள்ளப்பெருக்கு : மீட்புப் பணிகளுக்காக...

2026-09-09 18:18:38
news-image

தென்னேகும்புறையில் கடைகளை அகற்றச் சென்ற அதிகாரிகளுக்கு...

2026-09-09 19:45:33
news-image

தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆண் ஒருவரின்...

2026-09-09 17:44:50
news-image

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் புதிய சீனத் தூதுவருக்கும்...

2026-09-09 17:44:10