கொழும்பின் சில பகு­தி­களில் நாளை சனிக்கிழமை இரவு முதல் எட்டு மணித்­தி­யால நீர்வெட்டு அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக, தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்புச் சபை தெரி­வித்­துள்­ளது. 

பேஸ்லைன் வீதி, களனி பாலத்­திற்கு அருகில் இருந்து தெமட்­ட­கொடை சந்தி வரை­யான பிர­தான வீதி மற்றும் அனைத்து குறுக்கு வீதிகள், கொழும்பு - 13, 14 மற்றும் 15 ஆகிய பகு­தி­களில் இவ்­வாறு நீர்வெட்டு அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. 

இதற்­க­மைய நாளை இரவு 9 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதி­காலை 5 மணி வரை­யான காலப் பகு­தியில் இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.