பந்துல, ஹரின், மனுஷ, தம்மிக அமைச்சு பதவிகளிலிருந்து விலகினர்

Published By: Digital Desk 4

10 Jul, 2022 | 09:43 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை அமைச்சு பதவிகளில் இருந்து பந்துல குணவர்தன, ஹரீன் பெர்னான்டோ,மனுஷ நாணயக்கார மற்றும் தம்மிக பெரேரா ஆகியோர் விலகியுள்ளார்கள். ஜனாதிபதி,  பிரதமர் ஆகியோரை பதவி விலக கோரி நேற்று முன்தினம் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தை தொடர்ந்து இவர்கள் பதவி விலகினர்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சராக பதவி வகித்த பந்துல குணவர்தன நேற்று முன்தினம் பதவி விலகினார்.அத்துடன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் சுற்றுலாத்துறை,காணி விவகாரங்கள் அமைச்சராக பதவி வகித்த ஹரின் பெர்னான்டோ மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சராக பதவி வகித்த மனுஷ நாணயக்கார ஆகியோர் நேற்று முன்தினம் அமைச்சு பதவிகளில் இருந்து விலகியுள்ளர்.

சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பதற்காகவே தாங்கள் அமைச்சு பதவிகளில் இருந்து விலக தீர்மானித்ததாக ஹரீன் பெர்னான்டோ,மனுஷ நாணயக்கார ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெறவுள்ள 40,000 மெற்றிக்தொன் யூரியா உரத்தை விவசாயிகளுக்கு வெற்றிகரமாக பகிர்ந்தளித்ததை தொடர்ந்து தான் விவசாயத்துறை மற்றும் வனஜீனராசிகள் அமைச்சு பதவிகளில் இருந்து விலகுவதாக மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது பதவிகளில் இருந்து விலகுவதாக நேற்றைய தினம் ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பமான நெருக்கடியினை கருத்திற்கொண்டு தான் இத்தீர்மானத்தை முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

2025-12-17 01:32:44
news-image

யாழில் மாடியில் இருந்து விழுந்த குடும்பஸ்தர்...

2025-12-17 01:29:18
news-image

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதை விட, நீதிமன்றம்...

2025-12-17 01:03:01
news-image

அனர்த்தத்தின் பின்னரான நிவாரண வழங்கல் மற்றும்...

2025-12-17 00:59:49
news-image

'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' நிதியம் பற்றி மேல்மாகாண...

2025-12-17 00:52:57
news-image

எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் பொருளாதார நெருக்கடி...

2025-12-16 15:48:49
news-image

நெருக்கடியான நிலையை அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்த...

2025-12-16 16:45:04
news-image

குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ள விசேட...

2025-12-16 22:09:31
news-image

அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் எமது குரலை...

2025-12-16 17:18:15
news-image

சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு அழுத்தம் வழங்குங்கள்...

2025-12-16 17:03:11
news-image

அசோக ரன்வல தொடர்பில் கட்சி என்ற...

2025-12-16 17:17:30
news-image

இவ்வருடத்தில் கடந்த 9 மாதங்களில் 600...

2025-12-16 20:59:20