சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமராக சஜித்தை பரிந்துரைக்க முஸ்தீபு 

Published By: Digital Desk 4

10 Jul, 2022 | 10:23 PM
image

(எம்.மனோசித்ரா)

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமராக பரிந்துரைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். அவ்வாறு அவரது பெயரை பிரதமர் பதவிக்கு பரி;ந்துரைத்தால் பெரும்பான்மையை நிரூபிப்பது அவசியமாகும். எனவே தான் இது குறித்து ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

Articles Tagged Under: ஐக்கிய மக்கள் சக்தி | Virakesari.lk

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகுமாறு வலியுறுத்தி இலங்கை அரசியல் வரலாற்றில் முதன் முறையாக ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையை பொது மக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

இதனையடுத்து கட்சி தலைவர் கூட்டத்தில் 95 சதவீதமான கட்சி தலைவர்களின் இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி , பிரதமரை பதவி விலகுமாறு சபாநாயகர் ஊடாக நாடும் கேட்டுக் கொண்டோம். இதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பது அரசியல் கட்சிகனது கோரிக்கையாக மாத்திரமின்றி , இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் , சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் சர்வத மதத் தலைவர்களினதும் கோரிக்கையாக இருந்தது.

தற்போது அற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம்.

தற்போது அரசியலமைப்பின் பிரகாரம் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும். அதன் பின்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை விருப்பத்தைப் பெறுபவர் எஞ்சிய காலத்திற்கு ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும்.

இவ்வாறு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் 2024 நவம்பர் 17 ஆம் திகதி வரை ஜனாதிபதியாக பதவி வகிப்பார். எனவே தான் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெறுபவர் ஜனாதிபதியாக வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலான நாடுகளில் இவ்வாறு ஜனாதிபதி , பிரதமர் பதவி விலகும் சூழல் ஏற்பட்டால் புதிய பிரதமராக எதிர்ககட்சி தலைவரின் பெயரே பரிந்துரைக்கப்படும்.

அதற்கமைய எதிர்க்கட்சி தலைவரை அடுத்த பிரதமராக பரிந்துரைப்பது தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளோம்.

அவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் பிரதமராக பரிந்துரைக்கப்பட்டால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

அதற்கமைய சர்வ கட்சி பெரும்பான்மையுடன் எதிர்க்கட்சி தலைவரை பிரதமராக நியமிப்பதே எமது நிலைப்பாடாகும். அதன் பின்னர் அனைத்து கட்சிகளின் பங்கேற்புடன் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படும். ஜே.வி.பி.யிற்கும் இதற்கான அழைப்பினை விடுத்திருக்கின்றோம். அவர்கள் நாட்டின் எதிர்காலத்திற்காக சிந்தித்து செயற்படுவர் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04