(எம்.மனோசித்ரா)
இலங்கையில் காணப்பட்ட அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு கிட்டும் என்று எதிர்பார்க்கின்றோம். இந்த தீர்வானது இலங்கைக்கான உதவி திட்டங்கள் குறித்த கலந்துரையாடல்களை மீள ஆரம்பிப்பதற்கு ஏதுவாய் அமையும் என்று சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
![]()
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து , 13 ஆம் திகதி இராஜிநாமா செய்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே சர்வதேச நாணய நிதியம் இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெற்று வரும் முன்னேற்றங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் , சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதற்கு தற்போதைய அரசியல் மாற்றம் வழிவகுக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.
'தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் , மக்கள் மீது குறிப்பாக ஏழை மீது நாம் அக்கறை கொண்டுள்ளோம். மேலும் இந்த கடினமான நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான எமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்' என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியில் உள்ள அதிகாரிகளுடன் தொழில்நுட்ப கலந்துரையாடல்களை தொடரும் என்றும் சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்படவுள்ள தீர்க்கமான கலந்துரையாடல்களுக்கு நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று காணப்படுவது அத்தியாவசியமானதாகும். அவ்வாறன்றி அரசாங்கமொன்றின் நிர்வாகம் இன்றி நாட்டைக் கொண்டு செல்வது தவறாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
--




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM