எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்ததும் விநியோகத்தை துரிதப்படுத்துங்கள் : ஜனாதிபதி பணிப்பு

Published By: Vishnu

10 Jul, 2022 | 03:55 PM
image

(எம்.மனோசித்ரா)

சமையல் எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்தவுடன் விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுபாட்டுக்கு தீர்வு காணும் வகையில் 3740 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் இரண்டாவது கப்பல் திங்கட்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

முதலாவது எரிவாயு கப்பல் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு வந்தடைந்தது.

அதன் பின்னர் எரிவாயுவை தரையிறக்குதல் மற்றும் விநியோகித்தல் செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

3200 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவுடன் மூன்றாவது கப்பல் எதிர்வரும் 15 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது. இந்த மாத்திற்காக சுமார் 33 000 மெட்ரிக் தொன் எரிவாயுவிற்கு முற்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய  செவ்வாய்கிழமை (12) முதல் எரிவாயு விநியோகத்தை வழமை போன்று , ஒழுங்குமுறைமையொன்றுக்கமைய முன்னெடுக்கவுள்ளதாகவும், எரிவாயுவிற்கான கேள்வி தொடர்பில் நிலவும் நெருக்கடி இம்மாதத்தில் முழுமையாக முடிவுக்கு வரும் என்றும் லிட்ரோ நிறுவனம் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிப்படைத்தன்மை கொண்ட நீண்டகால முதலீடுகளுக்கு இலங்கையின்...

2026-08-12 16:42:09
news-image

இலங்கையில் இன்னும் ஆயுர்வேத சுற்றுலா அபிவிருத்தி...

2026-08-12 16:40:30
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள்...

2026-08-12 16:38:31
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திங்கட்கிழமை கொடியேற்றம்...

2026-08-12 16:14:25
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் தீர்மானத்தை...

2026-08-12 15:52:14
news-image

பரீட்சைகள் திணைக்களத்துக்கும் ஹேக்கர் அச்சுறுத்தல்

2026-08-12 15:14:48
news-image

எல் நினோ தீவிரமடைய 81 சதவீதம்...

2026-08-12 14:57:07
news-image

கடற்படைத் தளபதியை சந்தித்தார் பாகிஸ்தான் தூதரக...

2026-08-12 14:56:29
news-image

மடுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை பாதுகாக்க வேண்டும்;...

2026-08-12 14:55:46
news-image

ஜனாதிபதி நிதியம் தாமதம்: 25,000க்கும் அதிகமான...

2026-08-12 14:30:06
news-image

சர்ச்சையை ஏற்படுத்திய மகா சங்கத்தினரின் கடிதம்...

2026-08-12 14:28:29
news-image

சுகீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு:...

2026-08-12 14:07:12