ஊடகவியலாளர்கள் மீது விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்

09 Jul, 2022 | 09:39 PM
image

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பில் உள்ள 5 ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள இல்ல வளாகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த பகுதியில் பதற்ற நிலை அதிகரித்தது.

இதையடுத்து குறித்த இடத்தில் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்ட நியூஸ் பெஸ்ட்டின்  4  ஊடகவியலாளர்கள் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பெண் ஊடகவியலாளர்.

பொலிஸார் மற்றும் விசேட அதிரைப்படையினர் இந்த தாக்குதலை மேற்கொள்ளும் காட்சி தொலைக்காட்சியினூடக நேரலையாக ஒளிபரப்பானது.

படப்பிடிப்பாளர் நிலத்தில் வீழ்த்தப்பட்டு மிகவும் மோசமாகவும், கடுமையயாகவும் பொல்லுகளால் தாக்கப்பட்டுள்ளார். 

தாக்குதலுக்குள்ளான 4 ஊடகவியலாளர்களும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், போராட்டங்களின்  ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல் கவலைக்குரியது எனவும்  இலங்கையின் ஜனநாயகத்தில் ஊடக சுதந்திரம் மிக முக்கியமானது எனவும் வன்முறையைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பாதுகாப்புப் படையினர் மற்றும் போராட்டக்காரர்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு  கேட்டுக்கொள்கின்றேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொண்ட கொடூரமான மனிதாபிமானமற்ற தாக்குதலை  கண்டிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின்  அதிகாரி ரொமேஷ் லியனகே உள்ளிட்ட ஏனைய 3 அதிகாரிகளும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கையை பொலிஸ் மா அதிபர் எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41