(எம்.எப்.எம்.பஸீர்)

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பதவியிலிருந்து இராணுவ புலனாய்வு படையணிக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள பிரிகேடியர் சுரேஷ் சலேவிற்கு மியன்மார் தூதரகத்தில் பாதுகாப்பு பிரதானி  ( Military attache) பதவி வழங்கப்படவுள்ளதாக பாதுகாப்பு தரப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நேற்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இராணுவ தளபதி கிரிஷாந்த சில்வாவினால் பிரிகேடியர் விஜேந்திர குணதிலக நியமிக்கப்பட்டார். இந் நிலையிலேயே முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் சுரேஷ் சலேவுக்கு உயர் பதவி ஒன்றினை வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.

வழமையான இராணுவ இடமாற்றங்களின் பிரகாரமே  இந்த இடமாற்றம் வழங்கப்பட்டு புதிய இராணுவ புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் நியமிக்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.