ஜனாதிபதி, பிரதமர் பதவி விலக வேண்டும் ; கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானம் - ரவுப் ஹக்கீம் 

09 Jul, 2022 | 06:13 PM
image

(எம்.மனோசித்ரா)

சபாநாயகர் இல்லத்தில் இடம்பெற்றுவரும் கட்சி தலைவர் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடன் பதவி விலக வேண்டும் என்றும் , அதன் பின்னர் குறுகிய காலத்திற்கு சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக பதவி வகிக்க வேண்டும் என்றும் கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் , '' சபாநாயகரின் இல்லத்தில் அவசர கட்சி தலைவர் கூட்டம் இடம்பெற்று வருகிறது. பிரதமர் , அநுரகுமார திஸாநாயக்க மற்றும் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் மெய்ந்நிகர் ஊடாக கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரையும் பதவி விலகுமாறு கோருவதற்கு இதன் போது தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய அரசியலமைப்பின் பிரகாரம் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டும்.

கட்சித் தலைவர்கள் உடனடியாக அனைத்து கட்சி அரசாங்கத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது ஒரு சில குறைபாடுகளைக் கொண்டுள்ளது எனவே இதற்கான பல மாற்று வழிகள் தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றன.'' என்று குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பௌத்த அறக் கொள்கையை பேணும் சிங்களவர்களை...

2022-11-28 21:07:19
news-image

ஓமான் தூதரக அதிகாரி கொழும்பு விமானநிலையத்தில்...

2022-11-29 05:48:09
news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38