(இராஜதுரை ஹஷான்)
நாடு எதிர்கொண்டுள்ள பாரதூர தன்மையினை உணர்ந்து பாராளுமன்றத்தின் ஊடாக பதில் ஜனாதிபதியை தெரிவு செய்ய உடன் அவதானம் செலுத்த வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய பாராளுமன்றம் செயற்படாவிடின் மக்கள் பாராளுமன்றத்தையும் முற்றுகையிடுவார்கள் என பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சி தலைவர்கள் சபாநாயகரிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.
![]()
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் அமைதி போராட்டம் நூற்றுக்கு நூறு வீதம் வெற்றிப் பெற்றுள்ளது.தனக்கு மக்களாணை இல்லை என்பதை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ விளங்கிக்கொண்டு இனியாவது நாகரீகமான முறையில் பதவி விலக வேண்டும்.
பொது மக்கள் தங்களின் பொறுப்பை நிறைவேற்றியுள்ளார்கள்.பாராளுமன்ற மட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் தங்களின் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.பாராளுமன்றத்தின் ஊடாக பதில் ஜனாதிபதியை தெரிவு செய்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்.
பாராளுமன்றத்தின் ஊடாக தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணாவிடின் மக்கள் பாராளுமன்றத்தையும் முற்றுகையிடுவார்கள் என்பதை 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் விளங்கிக்கொள்ள வேண்டும்,ஆகவே தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி தவிர்த்து சகல தரப்பினரும் ஒன்றினைய வேண்டும்.
மக்கள் போராட்டம் வெற்றிப்பெற்றுள்ளமை மகிழ்விற்குரியது.நாட்டு மக்கள் வன்முறையற்ற வகையில் ஜனநாயக ரீதியில் தங்களின் அடிப்படை உரிமைகளை வெளிப்படுத்தியமைக்கு மதிப்பளிக்கிறோம் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM