கோட்டபயவை கவனத்திற் கொள்ளாமல் பிரதமரை நியமித்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் - வாசு

By Digital Desk 5

10 Jul, 2022 | 01:19 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்தற்கு தேவையான 113 பெரும்பான்மையினை எதிர்வரும் வாரத்திற்குள் இறுதிப்படுத்துவோம்.ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை கவனத்திற் கொள்ளாமல் பிரதமரை நியமித்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ எதிர்வரும் வாரகாலத்திற்குள் பதவி விலகுவார் அல்லது விலக்கப்படுவார்.ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையில் எந்த அரசாங்கத்தை ஸ்தாபித்தாலும்,நாட்டு மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள போவதில்லை.ஆகவே ஜனாதிபதியை பொருட்படுத்தாமல் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளோம்.

சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும்.6மாத காலத்திற்கு பின்னர் கட்டாயம் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை கட்சி தலைவர்கள வலியுறுத்துகிறார்கள்.

சர்வக்கட்சி அரசாங்கம் ஒரு தற்காலிக தீர்வாகும்.தமக்கான அரசாங்கத்தை ஸ்தாபிக்க மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவியில் இருக்கும் வரை மக்களின் அபிலாசைகளுக்கு முன்னுரிமை வழங்கமாட்டார்.சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் எதிர்வரும் வாரம் மகாநாயக்க தேரர்களை சந்திக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-28 08:37:43
news-image

நாட்டின் பல மாகாணங்களில் மழை பெய்யும்...

2022-11-28 08:46:08
news-image

4 இலட்சம் கிலோ கிராம் பால்மா...

2022-11-27 13:52:12
news-image

29 ஆயிரம் வீரர்களின் தியாகத்தை மலினப்படுத்த...

2022-11-27 13:48:19
news-image

இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் எனும் ஜனாதிபதியின்...

2022-11-27 13:43:17
news-image

ரணில் என்ற சரித்திரத்தினுள் ஹிட்லரை நாம்...

2022-11-27 12:43:04
news-image

முட்டைக்கான சரியான விலையை ஒருவார காலத்திற்குள்...

2022-11-27 12:39:05
news-image

ஜனாதிபதியின் தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும்...

2022-11-27 16:06:02
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள்...

2022-11-27 19:38:09
news-image

வட, கிழக்கில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம்...

2022-11-27 20:41:22
news-image

இன்னும் 6 மாதங்கள் இடமளியுங்கள் -...

2022-11-27 18:20:50
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக...

2022-11-27 19:07:44