'பொன்னியின் செல்வன்' டீசர் வெளியீடு

Published By: Digital Desk 5

09 Jul, 2022 | 12:29 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் தயாராகி இருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' எனும் சரித்திர நாவல், அதே பெயரில் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் திகதியன்று வெளியாகிறது.

தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. கடந்த சில தினங்களாக 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்களின் தோற்றப் புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது.

ஆதித்ய கரிகாலன், வந்திய தேவன், நந்தினி, குந்தவை பிராட்டியார், அருண்மொழிவர்மன்.. ஆகியோர்களை தொடர்ந்து, தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதற்காக சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் இயக்குநர் மணிரத்னம், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான்.. உள்ளிட்ட பட குழுவினர் பங்கு பற்றினர். பட்டிமன்ற பேச்சாளரும், தமிழ் இலக்கிய சிந்தனையாளருமான பாரதி பாஸ்கர், 'பொன்னியின் செல்வன்' குறித்த சிறப்புகளை எடுத்துரைத்தார்.

'பொன்னியின் செல்வன்' படத்தில் திரைக்கதையில் பங்களிப்பு செய்திருக்கும் எழுத்தாளர் ஜெயமோகன், 'பொன்னியின் செல்வன்' நாவலுக்கும், அதனை திரைப்படமாக உருவாக்கும் போது மாற்றம் பெற்றிருக்கும் விடயத்தையும் சுருக்கமாகவும், தெளிவாகவும் விளக்கினார். அதனைத் தொடர்ந்து 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்த நடிகர்கள் மேடையில் ஏறி, தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து 'பொன்னியின் செல்வன்' படத்தின் தமிழ் டீசரை நடிகர் சூர்யாவும், தெலுங்கு டீசரை நடிகர் மகேஷ்பாபுவும், மலையாள டீசரை மோகன்லாலும், கன்னட டீசரை ரக்ஷித் ட்டியும் இந்தி டீசரை அமிதாப் பச்சனும் வெளியிட்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் மணிரத்னம் பேசுகையில், '' பொன்னியின் செல்வன் நாவலை எம்முடைய கல்லூரி காலகட்டத்தில் முதன்முறையாக வாசித்தேன். அந்த தருணத்திலிருந்து கிட்டதட்ட 40 ஆண்டு காலமாக என் மனதில் இருந்து அகலாத கதை. இதை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்று 1980, 2000, 2010 ஆகிய காலகட்டங்களில் மூன்று முறை முயற்சி செய்தோம்.

இந்த கதை 'மக்கள் திலகம்' எம்ஜிஆர் அவர்களால் 'நாடோடி மன்னன்' படத்திற்கு பிறகு உருவாக வேண்டியது. ஏதோ சில காரணங்களால் அது நடைபெறவில்லை. அது ஏன் என்று தற்போது யோசித்தால், எங்களுக்காக அவர் விட்டுச் சென்று விட்டார் என்று தான் தோன்றுகிறது.

இந்த நாவலை படமாக்குவதற்கு நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் இவர்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் நிறைவடைந்திருக்காது. அதிலும் இதற்கான படப்பிடிப்பு கொரோனா காலகட்டத்தில் நடைபெற்றதால் நடிகர் நடிகைகள் முழு மனதுடன் பாதுகாப்புடன் ஒத்துழைப்பு நல்கினர்.

இதற்காக இந்தத் தருணத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதனை திரைப்படமாக உருவாக்குவதற்கு எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்ட ஏராளமான தமிழறிஞர்களின் பங்களிப்பும் இருக்கிறது. இவற்றையெல்லாம் விட லைகா நிறுவனத்தின் பங்களிப்பு சிறப்பானது. '' என்றார்.

பொன்னியின் செல்வன் டீசரில் நம் தமிழ் மண்ணின் மண்ணை ஆண்ட சோழர்களின் வரலாறு பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இணைய மற்றும் இளைய தலைமுறையினருக்கு தமிழர்களின் அசலான வீர வரலாறு, காட்சி ஊடகத்தின் வழியாக கடத்தப்பட்டிருக்கிறது என உறுதியாகச் சொல்லலாம்.

தமிழக எல்லையை கடந்து ஏனைய இந்தியப் பகுதிகளிலும், உலகத்திற்கும் தமிழ் மண்ணின் சரித்திரம் பேசும் படைப்பாக 'பொன்னியின் செல்வன்' செம்மாந்து செருக்குடன் நிற்கும் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜெய் நடிக்கும் 'லேபிள்' எனும் இணையத்...

2023-03-25 13:30:04
news-image

‘பொன்னியின் செல்வன் 2' படத்தின் முன்னோட்டம்...

2023-03-25 13:22:11
news-image

இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் மனோஜ் பாரதிராஜா

2023-03-25 13:01:41
news-image

'மாவீரன் பிள்ளை' திரைப்படத்தின் இசை வெளியீடு

2023-03-25 12:48:16
news-image

'வசீகரா...' பாடல் புகழ் பாடகி பாம்பே...

2023-03-24 17:00:01
news-image

செங்களம் - இணைய தொடர் விமர்சனம்

2023-03-24 16:01:08
news-image

விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் முதற்கட்ட...

2023-03-24 15:59:17
news-image

நடிகர் அஸ்வின் நடிக்கும் 'பீட்சா 3'...

2023-03-24 13:08:36
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் 'ரெய்டு' படத்தின்...

2023-03-24 13:37:10
news-image

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'குஷி'...

2023-03-24 13:38:00
news-image

நடிகர் ஜெய் நடிக்கும் 'தீராக் காதல்'...

2023-03-24 13:50:05
news-image

குழந்தைகளுக்கு தொடுதல் பற்றி பெற்றோர்கள் தொடர்ந்து...

2023-03-23 16:51:38