பொலிஸ் ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில் புகையிரத சேவை முன்னெடுக்கப்பட மாட்டாது என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளையதினம் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் பெரும் போராட்டத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு , கொழும்பு மத்தி , நுகேகொட, களனி, நீர்கொழும்பு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை அமுல் படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே பொலிஸ் ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில் புகையிரத சேவை முன்னெடுக்கப்பட மாட்டாது என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, புகையிரத சேவை முடக்கத்தினால் பொதுப் பயணிகள் புகையிரத நிலையங்கள் மீது தாக்குதலை முன்னெடுத்தால் அதன் பொறுப்பை அரசாங்கம் முழுமையாக ஏற்க வேண்டும் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் எவ்வித திட்டமிடலுமில்லாத வகையில் புகையிரத சேவையை முடக்க தீர்மானித்துள்ளமை முட்டாள் தனமானதொரு செயற்பாடாகும் எனவும் புகையிரத நிலைய பொறுப்பதிகரிகள் சங்கம் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM