வன்முறையற்ற போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஆதரவு

By T Yuwaraj

08 Jul, 2022 | 09:57 PM
image

(ஆர்.ராம்)

நாடளாவிய ரீதியில் நாளைய தினம் முன்னெடுக்கப்படும் பூரண ஹர்த்தால் மற்றும் கோட்ட கோ ஹோம் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது பூரணமான ஆதரவினை அளிப்பதாக அறிவித்துள்ளது.

Local News | Virakesari

அத்துடன், இந்தப்போராட்டங்களின் போது வன்முறைகளின்றி ஜனநாயக வழிகளை பின்பற்றுமாறும் போராட்டக்காரர்களிடத்தில் பகிரங்கமான கோரிக்கையை விடுத்துள்ளது.

இதுதொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்தரன் தெரிவித்துள்ளதாவது, நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் ஏற்படுவதற்கு காரணமாகியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியை விட்டுச் செல்லவேண்டும்

என்ற போராட்டக்காரர்களின் நிலைப்பாட்டிலேயே நாமும் உள்ளோம். அத்துடன், அவர் தலைமையிலான ஒட்டுமொத்தமான அரசாங்கமும் முழுமையாக பதவியிலிருந்து வெளியேறி போராட்டக்காரர்களின் ஜனநாயக கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும்.

அந்த வகையில் நாளையதினம் முன்னெடுக்கும் நாடளாவிய ஹர்த்தல் மற்றும் கண்டனப் போராட்டங்களுக்கு எமது தரப்பு முழுமையான ஆதரவினை வழங்கவுள்ளது. அத்துடன்ரூபவ் இந்தக் கண்டனப்போரட்டங்கள் வன்முறைகள் அற்றவகையில் ஜனநாயக

ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டும். போராட்டக்காரர்களின் வெளிப்படுத்தல்களுக்கு எந்தவொருதரப்பினரும் முறையற்ற வகையில் தடைகளை ஏற்படுத்தக்கூடாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38
news-image

2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்...

2022-11-28 19:57:39
news-image

மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் நழுவிச்செல்லும்...

2022-11-28 19:54:34
news-image

நடுநிலையான வெளிவிவகார கொள்கையை பின்பற்றினால் மாத்திரமே...

2022-11-28 17:02:23